பார்த்திபன் இப்படி ஏமாத்துவாருன்னு எதிர்பாக்கவே இல்ல!. புலம்பும் இமான்!..
புதிய பாதை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். பாக்கியராஜின் உதவியாளர் என்பதால் வித்தியாசமாக யோசித்து எதையும் செய்வார். ஒரு வாழ்த்து சொன்னால் கூட அதில் அவரின் தனித்திறமை இருக்கும். வித்தியாசமான கதைகளை திரைப்படங்களாக இயக்கி வரும் இயக்குனர் இவர்.
பொதுவாக ஒரு பரிசோதனை முயற்சியை படமாகும்போது ‘ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?’ என்கிற அச்சம் இயக்குனர்களுக்கு ஏற்படும். தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில், சினிமாவை தயாரிப்பாளர்கள் வியாபாரமாக மட்டுமே பார்ப்பார்கள். இவ்வளவு போட்டால் இவ்வளவு லாபம் வரவேண்டும் என்பதுதான் அவர்களின் கணக்கு.
இதையும் படிங்க: அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கிய எஸ்.கே. பட அப்டேட்!.. எல்லாம் போச்சா!…
அதனால்தான் தனது பரிசோதனை முயற்சிகளுக்கு தானே தயாரிப்பாளராக மாறினார் பார்த்திபன். சுகமான சுமைகள், குடைக்குள் மழை, ஒத்த செருப்பு, கதை திரைக்கதை வசனம் இயக்கம், இரவிழ் நிழல் என பல புதிய கதைக்களங்களை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இதில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் மட்டுமே ஓடியது.
மற்ற படங்கள் எல்லாம் பார்த்திபனுக்கு நஷ்டம்தான். கமர்ஷியல் படம் எடுக்க தெரியும் என்றாலும் கலைப்படங்களை எடுக்கும் ஆர்வத்தில் காசு போனாலும் தொடர்ந்து அதையே செய்து வரும் இயக்குனராகவே இருக்கிறார் பார்த்திபன். அவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
அப்படி அவர் உருவாக்கி சமீபத்தில் வெளியான படம்தான் டீன்ஸ். குழந்தைகளின் உலகத்தை இப்படத்தில் காட்டி இருந்தார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய இமான் ‘டீன்ஸ் படத்தின் முதல் பாதியின் கதையை மட்டுமே பார்த்திபன் சார் என்னிடம் சொன்னார். இரண்டாம் பாகத்தை பிறகு சொல்கிறேன் என்றார்.
ஆனால், கடைசி வர கதை சொல்லாமல் ஏமாற்றிவிட்டார். பாடல் காட்சிகளுக்கான சூழ்நிலையை மட்டும் சொன்னார். அதேபோல், இரண்டாம் பாகத்தின் காட்சிகளை எழுதி கொடுத்து பின்னணி இசை அமைக்க சொன்னார். இதற்கு முன் இப்படி நான் வேலை செய்ததே இல்லை. நாமாக புரிந்து கொண்டு இசையமைக்க வேண்டும். இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது’ என சொல்லி இருக்கிறார்.