தனுஷ் அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 55 வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, ஸ்ரீ லீலா, மம்முட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மம்முட்டி இந்த படத்தில் இணைந்திருப்பது இந்த படத்திற்கு மேலும் ஒரு ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு வேளை தனுசுக்கு வில்லனாக மம்மூட்டி நடிப்பாரோ என்றெல்லாம் இப்போதிலிருந்து நெட்டிசன்கள் ஆராய ஆரம்பித்து விட்டனர். இன்னொரு பக்கம் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் டாப் நடிகைகளான சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பது இன்னும் பல சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. யார் யாருக்கு ஜோடி என்றெல்லாம் இப்போதிலிருந்தே விவாதங்கள் ஆரம்பித்து விட்டன.

இது எல்லாம் விட மொத்தமாக சிவகார்த்திகேயனின் ஒட்டுமொத்த குரூப்பையும் தூக்கி விட்டாரே தனுஷ் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் ராஜ்குமார் பெரியசாமி கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து தான் அமரன் திரைப்படத்தை எடுத்தார். சாய் பல்லவியும் சிவகார்த்திகேயனுடன் அமரன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். ஸ்ரீ லீலாவும் பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படி சிவகார்த்திகேயனுக்கு தொடர்புள்ள நபர்களுடன் தனுஷ் இப்போது பணியாற்ற இருப்பது ரசிகர்கள் இந்த மாதிரி கலாய்த்து வருகின்றனர். இந்த படத்தை பொருத்தவரைக்கும் எந்த மாதிரியான கதையாக வரப்போகிறது என்பது யாருக்குமே தெரியாது. இனிவரும் காலங்களில் இந்த படத்தை பற்றிய ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

