டாடா படத்திலும் அந்த பிரச்னை இருந்துச்சு… உடைத்த கவின்.. என்னங்க வாரிசு இயக்குனரையே அசிங்கப்படுத்திட்டீங்க…

Dada: நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்ஹிட் படமான டாடா படத்தில் நடந்த விஷயம் ஒன்றை தற்போதைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இதை கேட்ட ரசிகர்கள் என்னப்பா இப்படி மொக்கை பண்ணிட்டீங்களே எனக் கலாய்த்து வருகின்றனர்.

சீரியல் நடிகராக விஜய் டிவிக்கு எண்ட்ரி கொடுத்தவர் கவின். முதலில் அறிமுகம் சரியாக இருந்தாலும் பிக்பாஸில் நுழைந்தார். ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் அவர் மீது நெகட்டிவ் விமர்சனங்களே குவிந்தது. இருந்தும் அவருக்கு வோட்டிங்கில் முதலிடம் இருக்க பட்டத்தை தட்டி செல்ல வேண்டியவர். பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

இதையும் படிங்க: மே மாசம் யார் யார் படங்கள் ரிலீஸ் ஆக போகுதுனு தெரியுமா? அடிக்கிற வெயிலுக்கு இது பரவாயில்லை

இதை தொடர்ந்து லிப்ட் படத்தில் நடித்தார். அப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கடுத்து அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் டாடா இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கவினின் கேரியரையே மிகப்பெரிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. தொடர்ச்சியாக பல பட வாய்ப்புகள் குவிந்தது.

தற்போது அவர் நடிப்பில் ஸ்டார் படம் உருவாகி இருக்கிறது. டாடா படத்தின் இரண்டாம் பகுதியின் காட்சிகள் அடங்கிய ஹாட்டிஸ்க் அழிந்துவிட்டதாம். அது டாடா இரண்டாம் பாதியில் ஒரு ட்ரிப்புக்காக நண்பர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதை ஒரே காட்சியாக எடுக்க வேண்டாம் என்ற முடிவில் தனி தனி காட்சிகளாக ரெக்கார்ட் செய்தார்களாம்.

இதையும் படிங்க: அன்பே சிவம் படம் எனக்கு கொடுத்த தண்டனை… கிரி படம் தான் என்னை காப்பாத்தியது… வருத்தப்பட்ட சுந்தர்.சி…

ஆனால் ஒரு கட்டத்தில் அந்த காட்சிகள் அழிந்துவிட்டது. மறுபடியும் ஷூட்டிங் செய்யும் நிலையும் இல்லை. அந்த நேரத்தில் தான் லவ் டுடே படம் ரிலீஸ் ஆனது. கவின் படத்தினை பார்த்து இருக்கிறார். அதில் போனின் முக்கியத்துவம் சொல்லப்பட்டது டாடா படத்துக்கும் பயன்பட்டதாம். நண்பர்கள் பேசியதை காட்சிகளாக இல்லாமல் போனில் மெசேஜ் செய்யும்படி வைத்துக்கொள்ளலாம் என மாற்றி எடிட்டிங்கில் சரி செய்து அந்த படத்தினை முடித்து ரிலீஸ் செய்ததாக தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு முன்னர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான லால் சலாம் படத்திலும் ஹார்ட் டிஸ்க் அழிந்துவிட்டதாக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பார். அந்த படமும் மிகப்பெரிய அளவில் தோல்வி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story