படம் ஓடாதுன்னு ரஜினியிடமே சொன்ன டான்ஸ் மாஸ்டர்… இருந்தாலும் இவ்வளவு தைரியம் ஆகாதுப்பா!..

Rajinikanth
இந்திய சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த்தின் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “பாபா”. இத்திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை ஆகியவற்றை எழுதி இந்த படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார் ரஜினிகாந்த். எனினும் “பாபா” திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.

Baba
இதனை தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி “பாபா” திரைப்படத்தை மறுவெளியீடு செய்தனர். எனினும் இந்த முறை ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் “பாபா” திரைப்படம் ஓடாது என்று அத்திரைப்படத்தில் பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர் அன்றே ரஜினியிடம் தைரியமாக கூறியிருக்கிறார். அந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
“பாபா” திரைப்படத்தில் இடம்பெற்ற “மாயா மாயா” என்ற பாடலில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர் ராகவா லாரன்ஸ். இவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.

Baba
“மாயா மாயா” பாடலின் உருவாக்கத்தின்போது ராகவா லாரன்ஸ், மொத்த திரைப்படத்தையும் பார்த்தபிறகுதான் என்னால் இந்த பாடலுக்கு நடனம் அமைக்க முடியும் என கூறியிருக்கிறார். உடனே ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸுக்கு “பாபா” திரைப்படத்தை போட்டுக் காட்டினாராம்.
அதனை பார்த்த ராகவா லாரன்ஸ், ரஜினியிடம் “இந்த படம் நல்லாவே இல்லை. சுத்தமாக ஓடாது” என கூறியிருக்கிறார். இதனை கேட்ட ரஜினிக்கு கடும் கோபம் வந்ததாம். ஆனால் அவர் அதனை வெளிக்காட்டவில்லையாம்.
இதையும் படிங்க: “என் பேச்சை கேட்காம இப்படி செஞ்சிட்டான் சார்”… தயாரிப்பாளரிடம் விஜய்யை நினைத்து அழுது புலம்பிய எஸ்.ஏ.சி…

Rajini and Raghava Lawrence
அதன் பின் அந்த இடத்தை விட்டு லாரன்ஸ் நகர்ந்தபிறகு, அங்குள்ளவர்களிடம் “இவன் என் ரசிகன். அதனால் எனது ரசிகனாகவே இந்த படத்தை பார்த்திருக்கிறான். அதனால்தான் படம் நன்றாக இல்லை என கூறுகிறான். ஒரு பொதுவான சினிமா ரசிகனாக இவன் இந்த படத்தை பார்க்கவில்லை” என கூறினாராம். எனினும் “பாபா” திரைப்படத்தின் தோல்வியை ரஜினியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்பதுதான் உண்மை.