நடன இயக்குனர் ரவி தேவ் விஜயின் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அஜித்துடன் உன்னைத் தேடி படத்தில் பணியாற்றியுள்ளார். இவர் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சில தகவல்களைப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
அஜித், விஜய் இருவருமே ஒருவரை ஒருவர் குறை சொல்ல மாட்டார்கள். நான் பக்கத்தில் இருந்து பார்த்துருக்கேன். மற்றவர்கள் தான் அவங்க ரசிகர்களுக்குள் கலகம் ஊட்டி, இருவருக்கும் கோபம் வருமா என பார்த்துக் குளிர் காய்கின்றனர். என்னை விஜய் மாஸ்டர்னு தான் சொல்வாங்க. அப்படி இருக்கும்போது எங்கிட்டேயே அஜித் பற்றி விஜய் எதுவுமே சொன்னது இல்லை. அஜித்தும் அப்படித்தான்.
உன்னைத் தேடி படத்தின் போது ஒரு முறை அஜித்துக்கு இடுப்புக்குக் கீழ் கால் முட்டு வரை உணர்வே கிடையாதாம். அதை வைத்துக் கொண்டு டான்ஸ் ஸ்டெப் எல்லாம் சொல்லிக் கொடுத்தபடி அனாயசமாக ஆடினார். அவருக்கு அப்படி ஒரு பிரச்சனை இருக்கு என்பதே எனக்குத் தெரியாது. ராஜூ சார் சொன்னதும் தான் எனக்குத் தெரியும். ஒரு தடவை அஜித் சாரே என்னிடம் சொன்னார்.
‘மாஸ்டர் இந்த ஒரு தடவை தான் ஆபரேஷன் பண்ணுவேன். சக்சஸ் ஆகலைன்னா படம் நடிக்கறதை நிறுத்திட வேண்டியதுதான்’னு சொன்னாராம். ‘நீங்க வேற. அப்படி எல்லாம் சொல்லாதீங்க. திருப்பி வந்துடுவீங்க’ன்னாரு. எனக்கு இந்த விஷயம் தெரியாம அவரை ஜம்ப் பண்ண சொல்றேன். குதிக்கச் சொல்றேன்.
எனக்கு அப்புறம்தான் தெரிஞ்சது. அவருக்கு ஒரு விபத்துல பின்னாடி பட்ட அடியோட வலி. அப்புறம் ஆபரேஷன் பண்ணி கொஞ்ச நாள்; ரெஸ்ட் எடுத்தாரு. வீல் சேர்ல உட்கார்ந்து டப்பிங் பண்ணினாரு என்கிறார் ஆச்சரியத்துடன் ரவிதேவ் மாஸ்டர்.
1999ல் சுந்தர்.சி. இயக்கத்தில் தேவா இசையில் வெளியான படம் உன்னைத் தேடி. அஜித், மாளவிகா, சிவகுமார், விவேக், ஸ்ரீவித்யா, கரண் உள்பட பலர் நடித்துள்ளனர். காற்றாக வருவாயா, மாளவிகா, நீதானா, நாளை காலை, போறாளே, ஒயிலா ஒயிலா ஆகிய பாடல்கள் உள்ளன. உன்னைத்தேடி படத்தின் டான்ஸ் மாஸ்டர் ராஜூசுந்தரம். அவரது உதவியாளராக ரவி தேவ் பணியாற்றியுள்ளார்.