என்னது அது வேறொரு படத்துல ஆடுனதா? விஜய் படத்தில் நடந்த எடிட்டிங் மேஜிக்..யாருக்காச்சும் தெரியுமா?

by Rohini |   ( Updated:2025-04-27 02:24:18  )
vijay_dance
X

vijay_dance

Vijay: ஒரு படத்தில் ஆடும் போது விஜய்க்கு ஏற்பட்ட விபத்து குறித்து அந்தப் படத்தில் கொரியோகிராபராக வேலை செய்த ஒருத்தர் கூறியிருக்கிறார் அதுதான் இப்போது வைரலாகி வருகின்றது. விஜய் என்றாலே மாஸ் என அனைவருக்கும் தெரியும். ஆனால் நடனத்தில் அவரை மிஞ்சிய நடிகர் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நன்கு நடனம் தெரிந்து முறைப்படி நடனம் கற்று கொண்டவர்களையே பொறாமைப்பட வைக்கும் அளவுக்கு விஜயின் நடனம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவருடைய நடனத்தில் கிரேஸ் இருக்கும். அவரை மட்டுமே பார்க்க வைப்பார் விஜய். இந்த நிலையில் விஜய், கௌசல்யா நடிப்பில் வெளியான திரைப்படம் பிரியமுடன். அந்தப் படம் விமர்சன ரீதியாக சரியான வரவேற்பை பெறவில்லை எனினும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக அந்தப் படத்தில் அமைந்த மவுரியா மவுரியா மனசுக்குள்ள வர்றீயா பாடல் ஆடாதவர்களை கூட ஆட வைக்கும்.

அந்தப் பாடலை விஜய்தான் பாடியிருப்பார். அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து கொடுத்தவர் ரவிதேவ். இந்தப் படத்தில் ஆடும் போது விஜய்க்கு சுலுக்கு பிடித்துவிட்டதாம். அதனால் நாளைக்கு படப்பிடிப்பை வைத்து கொள்ளலாம் என சொல்லி விஜய் கிளம்பிவிட்டாராம். அன்று இரவே ரவி தேவுக்கு பேஜர் மூலமாக கால் பண்ண சொல்லி எஸ்.ஏ.சியிடம் இருந்து தகவல் வர இவரும் பேசியிருக்கிறார். உடனே வீட்டுக்கு வர சொன்னாராம் சந்திரசேகர்.

ரவிதேவ் போனதும் அங்கு கூட்டம் கூடியிருந்ததாம். மருத்துவர்கள் வந்திருந்தார்களாம். ரவி தேவுக்கு பயம். உடனே சந்திரசேகர் ‘எந்த மாதிரியான ஸ்டெப் போட்ட? இப்படி படுத்துக் கிடக்கான்’ என சொல்லி சத்தம் போட்டாராம். உடனே அறையில் இருந்த விஜய் ‘அப்பா கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க ’ என சந்திரசேகரை விஜய் சத்தம் போட்டிருக்கிறார். இருந்தாலும் சிம்பிளான ஸ்டெப் தான் என ரவி தேவ் அந்த ஸ்டெப்பை போட்டும் காண்பித்திருக்கிறார்.விஜயால் எழுந்து உட்காரவே முடியவில்லையாம்.

உடனே ஸ்பைனல் கார்டில் சர்ஜரி செய்ய வேண்டும் என பேசிக் கொண்டிருந்தார்களாம். உடனே விஜயிடம் ரவிதேவ் ‘ஆப்ரேஷன் எல்லாம் வேண்டாம் சார். ஸ்பைனலில் சர்ஜரினா அது ரிஸ்க். ஆயூர்வேதாவில் இறங்குங்க’ என சொல்லி அறிவுரை வழங்கியிருக்கிறார். அதன் படி ஆயூர்வேதத்தில் இறங்கிதான் சிகிச்சை எடுத்தாராம் விஜய்.

இன்னொரு பக்கம் படம் முடிக்க வேண்டிய கட்டாயம். அதனால் விஜய் நடித்த ரசிகன் மற்றும் மாண்புமிகு மாணவன் பட கேசட்டை சந்திரசேகரிடம் இருந்து வாங்கி அதில் விஜய் போட்ட ஸ்டெப்ஸ்களை எல்லாம் கட் செய்து இந்த பாடலில் சேர்த்து எடிட்டிங்கில் சேர்த்தாராம் ரவிதேவ். யாராலும் அதை கண்டுபிடிக்க முடியாது. அப்படித்தான் மவுரியா பாடலை படமாக்கினோம் என ரவிதேவ் கூறினார்.

Next Story