gvm-க்கு நண்பனா இருந்துட்டு நான் பட்ட கஷ்டம்?.. பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்..
தமிழ் சினிமாவில் காதல் கதை, போலீஸ் திரில்லர் கதைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரின் பெரும்பாலான படங்கள் விமர்சன ரீதியில் வெற்றியடைந்தவை. மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க போன்ற இவரத் படைப்புகள் காதலின் ஆழத்தை தெள்ள தெளிவாக காட்டிய படங்களாகும்.
அதே போல் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, வேட்டையாடு விளையாடு போன்ற படங்கள் துப்பறியும் போலீஸ் கதாபாத்திரங்களை அழகாக விவரித்திருக்கும். அடுத்ததாக விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை எடுத்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.
படைப்பையும் தாண்டி இப்போது ஒரு சிறந்த நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். இவர் இல்லாத தமிழ் படங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு வெளியாகும் அத்தனை படங்களிலும் கௌதமின் கதாபாத்திரம் இருக்கின்றது.
விஜயின் லியோ படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கௌதம் நடித்து வருகிறார். இந்த நிலையில் கௌதம் வாசுதேவ் மேனனை பற்றி அவரது நெருங்கிய நண்பரும் பிரபல வில்லன் நடிகருமான டேனியல் பாலாஜி அவரது அனுபவங்களை பகிர்ந்தார்.
அதாவது ஆரம்பத்தில் இருந்தே இருவரும் நெருங்கி பழகக்கூடிய நண்பர்கள். கௌதமின் அனைத்து படங்களிலும் டேனியல் பாலாஜி கண்டிப்பாக இருப்பார். இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படத்தில் ஒரு இரண்டு காட்சிகள் மட்டும் நடித்து கொடுத்து விட்டு போ என கௌதம் அழைத்தாராம். நண்பன் தானே என்று டேனியல் அந்தப் படத்தில் தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : இளையராஜா மாதிரி மட்டமான மனிதரை பாக்கவே முடியாது! – பொங்கிய ஜேம்ஸ் வசந்தன்..
ஆனால் இது முதல் தடவை இல்லை. இதே போல் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா போன்ற சில படங்களில் ஒரு சில காட்சிகளுக்கு நடிக்க டேனியலை தான் கௌதம் கூப்பிடுவாராம். இதை குறிப்பிட்டு பேசிய டேனியல் ‘ நண்பன், தோழன் இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரியான தொல்லைகளும் நம்மை நெருங்கி வரத்தான் செய்கின்றன’ என்று கூறினார்.