ஷங்கருக்கு ஆர்டர் போடுற இடத்துல இருந்தவர் டேனியல் பாலாஜி! அட இதெல்லாம் எப்ப நடந்தது?

Published on: April 3, 2024
shankar
---Advertisement---

Actor Daniel Balaji: சமீபத்தில் தமிழ் சினிமா ஒரு மிகப்பெரிய நடிகரை இழந்துள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மிக குறுகிய வயதில் அதுவும் மாரடைப்பு காரணத்தால் திரையுலகம் பலரை இழந்து வருகிறது. அதில் டேனியல் பாலாஜியும் இணைந்திருக்கிறார்.

தோற்றத்திற்கு சம்பந்தமில்லாத நபராகத்தான் நிஜ வாழ்க்கையில் வாழ்ந்து வந்திருக்கிறார். அவரை பார்த்தாலே ரக்டு கேரக்டராக இருப்பாரோ என்றுதான் நினைக்க தோன்றும். ஆனால் உண்மையிலேயே பெரிய ஆன்மீகவாதியாக இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயின் அந்த சூப்பர்ஹிட் காட்சியை எடுக்கும் போது இது இல்லை… பிரண்ட்ஸ் படத்தின் உண்மை…

ஆவடியில் அங்காள பரமேஸ்வரி கோயிலை கட்டி மக்களுக்கு அதன் மூலம் பல நல்ல செயல்களை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஆவடியில் உள்ள மக்களுக்கு அவ்வப்போது துணிமணிகள் எடுத்துக் கொடுப்பது, அன்னதானம் கொடுப்பது என செய்து வந்திருக்கிறார்.

முரளியின் சித்தி மகன் தான் டேனியல் பாலாஜி. ஆனால் சில காலமாக முரளி குடும்பமும் டேனியல் பாலாஜியின் குடும்பமும் பேசிக் கொள்ளவில்லை என்று வலைப்பேச்சு அந்தனன் கூறினார். ஏதோ ஒரு காதல் சம்பவத்தால் இரு குடும்பமும் பிரிந்து போனதாகவும் அந்தனன் கூறினார்.

இதையும் படிங்க: ஹீரோக்களை நம்பாத இயக்குனர்கள் இங்கதான் இருக்காங்க!.. சும்மா பேசாதீங்க!.. சீறும் லிங்குசாமி!…

அதுமட்டுமல்லாமல் தன் பெயரை பயன்படுத்தி டேனியல் பாலாஜி வந்துவிடக் கூடாது என்று மிகக் கவனமாக இருந்தாராம் முரளி. இருந்தாலும் டேனியல் பாலாஜி படிக்கும் போதே கோல்டு மெடலிஸ்ட்டாம். அதி புத்திசாலியாக இருந்திருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த ஜீன்ஸ் படத்தை தயாரித்த கம்பெனியில் சி.இ.ஓ-வாக இருந்தவராம் டேனியல் பாலாஜி.

அதனால் ஷூட்டிங் ஒழுங்காக நடக்கிறதா? எங்கெல்லாம் இன்று படப்பிடிப்பை நடத்த இருக்கிறீர்கள்? போன்ற கட்டளைகளை போடும் இடத்தில் இருந்தவர் டேனியல் பாலாஜி என அந்தனன் கூறினார். அப்படியே இருந்திருந்தால் கூட இன்று டேனியல் பாலாஜியின் லைஃப் ஸ்டைல் மாறியிருந்திருக்கும் என்றும் அந்தனன் கூறினார்.

இதையும் படிங்க: காலங்காலமாக இந்த நடிகருக்கு நன்றிக்கடன் பட்டவன் நான்! யாரை சொன்னார் தெரியுமா வடிவேலு?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.