திருப்பதியில் சாமி தரிசனம்... மீண்டும் இணையும் தனுஷ்- ஐஸ்வர்யா?....

by சிவா |   ( Updated:2022-02-08 09:34:16  )
danush
X

நடிகர் தனுஷும், அவரின் மனைவியும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவும் சமீபத்தில் இருவரும் பிரிந்து விடுவதாக அறிவித்தனர். இது ரஜினி, தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும், இதில், ஐஸ்வர்யாவின் அப்பா ரஜினிக்கும், தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா என யாருக்கும் மகிழ்ச்சி இல்லை எனவும் கூறப்படுகிறது.

danush

தோளுக்கு மேல் வளர்ந்த மகன்கள் இருக்கும் போது ஏன் விவகாரத்து செய்ய முடிவெடுத்தாய் என மகள் ஐஸ்வர்யா மீது ரஜினி கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, ஐஸ்வர்யாவுடன் ரஜினி பேசுவதில்லையாம். சமீபத்தில், படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற தனுஷும், ஆல்பம் பாடல் ஒன்றுக்காக அங்கு சென்ற ஐஸ்வர்யாவும் ஒரே ஹோட்டலில் தங்கினார்கள். ஆனால், இருவரும் பேசிக்கொண்டார்களா என தெரியவில்லை.

danush_main

ஒருபக்கம், விவாகரத்து முடிவை கை விடுமாறு தனுஷிடம் பேசி வருகிறாராம் அவரின் அப்பா கஸ்தூரி ராஜா. ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்து தற்போது அண்ணன் செல்வராகவன் வீட்டில் அவரின் குழந்தைகளுடன் பொழுதை போக்கி வருகிறார் தனுஷ்.

தனுஷின் இரு மகன்களும் அம்மாவுடன் ரஜினியின் போயஸ்கார்டன் வீட்டில் இருக்கிறார்கள். ஒருபக்கம், அப்பாவும், அம்மாவும் மீண்டும் சேர வேண்டும் என தனுஷின் இரு மகன்களும் ஆசைப்படுகின்றனர். லதா ரஜினிகாந்தும் அதையே விரும்புகிறார். ரசிகர்களின் விருப்பமும் அதுவே.

இந்நிலையில், இருவரும் திருப்பதி சென்று கடவுளை வழிபடுங்கள். வணங்கிவிட்டு இனிமேல் சேர்ந்தே வாழ்வோம் என்கிற முடிவுடன் சென்னை திரும்புங்கள் என கஸ்தூரி ராஜா கூறி வருகிறாராம். அப்பா சொன்னால் தனுஷ் கேட்பார் என்பதால், விரைவில் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் திருப்பதி செல்ல வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

நல்லது நடந்தா சரி...

Next Story