இத செஞ்சாதான் உன் படத்துல நடிப்பேன்... அண்ணன்கிட்டயே கறார் காட்டிய தனுஷ்....
தனுஷை பொறுத்தவரை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த புதுப்பேட்டை, காதல் கொண்டேன் ஆகிய 2 படங்கள் மூலமாகத்தான் சிறந்த நடிகராக அவர் மாறினார். ஆனால், அப்படங்களுக்கு பின் பல வருடங்களாக இருவரும் இணையவே இல்லை. தனுஷ் தற்போது பல படங்களிலும் நடித்தும், தேசிய விருது பெற்றும் பெரிய நடிகராகி விட்டார்.
ஒரு வருடத்திற்கு முன்பு அவரும், செல்வராகவனும் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், அது ஆயிரத்தில் ஒருவன் 2 இல்லை என செல்வராகவன் கூறினார். எனவே, இருவரின் கூட்டணியை ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
அதன்பின் அப்படத்தின் தலைப்பு ‘நானே வருவேன்’ எனவும், தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்டு 20ம் தேதி துவங்கும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் செய்திகள் கசிந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மாறன், திருச்சிற்றம்பலம் என சில படங்களில் தனுஷ் நடித்து வந்ததால் செல்வராகவனுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், நானே வருவேன் படத்திற்கு நடிக்க வந்தார் தனுஷ். அப்படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியானது. Cow boy போல் தனுஷ் தலையில் தொப்பி அணிந்து, வாயில் சுருட்டு வைத்து போஸ் கொடுத்திருந்தார். ஆனால், படப்பிடிப்பு தற்போது வரை துவங்கவே இல்லை.
இப்படத்தின் முழுக்கதையையும் எழுதி என்னிடம் கொடுத்தால் மட்டுமே கால்ஷீட் கொடுப்பேன் என செல்வராகவனிடம் தனுஷ் கூறிவிட்டாராம். இது செல்வராகவனுக்கு பழக்கமே கிடையாது. படப்பிடிப்புக்கு சென்று தோணுவதை எடுப்பதுதான் அவரின் பழக்கம்.
இதனால்தான் அவர் இயக்கும் படங்களின் படப்பிடிப்பு அதிக நாட்கள் இழுக்கும். இதை தெரிந்துதான் தனுஷ் இப்படி ஒரு செக் வைத்தார். எனவே, சில மாதங்கள் எடுத்து தற்போது தனுஷ் கேட்டபடி முழுக்கதையையும் உருவாக்கி தனுஷிடம் கொடுத்து அவரின் சம்மதம் பெற்றுள்ளார் செல்வராகவன். விரைவில் இப்படத்திற்கு தனுஷ் கால்ஷீட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிப்பு சொல்லிக்கொடுத்த அண்ணன்கிட்டயே தனுஷ் கறார் காட்டுகிறார்.. அதை கேட்க வேண்டிய நிலையில் செல்வராகவன் இருக்கிறார்...