Cinema News
நடந்து போற தூரத்துக்கு ஆடி காரு வேணுமாம்!.. பழசெல்லாம் மறந்து போச்சா தனுஷ்?!…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கிய கஸ்தூரி ராஜாவின் இளைய மகன்தான் தனுஷ், துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி 3 திரைப்படங்கள் தொடர் வெற்றி கொடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினி மகளையே திருமணம் செய்து கொண்டவர். ஒருபக்கம் கமர்ஷியல் சினிமா ஒருபக்கம் கலை சினிமா என ஒரு சிறந்த நடிகராக மாறியிருப்பவர். சிறந்த நடிப்புக்கான தேசிய விருதுகளையும் பெற்றவர். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஹிந்தி, ஹாலிவுட், டோலிவுட் என கலக்கி வருகிறார். இவரின் அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் இப்போது பலராலும் சிலாகித்து பேசப்பட்டு வருகிறது.
தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராக்கி, சாணி காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மதேஸ்வரன் இயக்கி வருகிறார்.
முன்பெல்லாம் நடிகர்கள் படப்பிடிப்பு தளங்களில் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார்கள். டைரக்டர் கூப்பிடும்போது போய் நடித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் போய் அமர்ந்துகொள்வார்கள். ஒரு கட்டத்தில் கேரவான் கலாச்சாரம் துவங்கியது. பெரிய வேன் போன்ற வண்டியில் நடிகர் ஓய்வெடுக்கவும், சாப்பிடவும், தூங்கவும் என எல்லாவற்றும் கேரவான் வசதியாகி போனது. இப்போதெல்லாம் சாதாரண நடிகர்களுக்கு கூட கேரவான் வசதி கொடுக்கப்படுகிறது.
கேப்டன் மில்லர் படப்பிடிப்பு பல நாட்களாக தென்காசி மாவட்டத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் கேரவான் இருக்கும் தூரத்திற்கும் நடந்து போகும் தூரம் என்றாலும் ரசிகர்களின் தொல்லை இருக்கும் என்பதால் தனுஷுக்கு ஒரு இனோவா காரை தயாரிப்பாளர் தயார் செய்து வைத்திருந்தாராம். ஆனால், ‘நான் எவ்வளவு பெரிய நடிகர் எனக்கு ஆடி காரை வைக்காமல் இனோவா காரை நீங்கள் எப்படி கொடுக்கலாம்?’ என தயாரிப்பாளரிடம் தனுஷ் எகிறினாராம். அதோடு, கோபித்துகொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் சென்னை திரும்பிவிட்டாராம். அதன்பின் தயாரிப்பாளரும், இயக்குனரும் நேரில் சென்று தனுஷை சம்மதிக்க வைத்து மீண்டும் படப்பிடிப்பு அழைத்து சென்றார்களாம்.
ஊரெல்லாம் கடன் வாங்கி படம் எடுத்து நஷ்டமடைந்து கடனை கட்டமுடியாமல் தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு சென்றுவிடலாம் என தனுஷின் அப்பா சில வருடங்களுக்கு முன்பு முடிவெடுத்தார். கடைசி முயற்சியாக தனுஷை ஹீரோவாக போட்டு அவர் எடுத்த துள்ளுவதோ இளமை படம் வெற்றியடைவே தனுஷ் குடும்பத்தின் வாழ்க்கை மாறியது. இதுதான் வரலாறு. ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு நடந்து போகும் துரத்திற்கு ஆடி கார் கேட்டு தனுஷ் அடம்பிடித்துள்ளார் எனில் அவர் பழசையெல்லாம் மறந்துவிட்டார் போல திரையுலகில் பேச துவங்கியுள்ளனர்.
இந்த தகவலை வலைப்பேசு அனந்தனன் ஒரு யுடியூப்பில் தெரிவித்துள்ளார்.