மனைவியை பிரிகிறேன்!... எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்த தனுஷ்.....
நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வீட்டை வீட்டு தனுஷின் வீட்டிலே சென்று தங்கி நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என அடம்பிடித்ததால் வேறு வழியின்றி தனுஷுக்கு தன் மகளை திருமணம் செய்து வைத்தார் ரஜினி.தற்போது அவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இதில் மூத்தமகனுக்கு 17 வயது ஆகிறது.
இந்நிலையில், திடீரென நேற்று இரவு 11 மணிக்கு நானும், ஐஸ்வர்யாவும் பிரிகிறோம் எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் தனுஷ். நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் செல்கிறோம் என குறிப்பிட்டுள்ளார் தனுஷ்.
இதுவரை இருவருக்கும் பிரச்சனை இருப்பதாக இதற்கு முன் எந்த செய்தியும் வெளியாகவில்லை. அப்படி இருக்க இருவரும் பிரிய முடிவெடுத்திருப்பது அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது.
குறிப்பாக, தனுஷின் இந்த அறிவிப்பு இது ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இதனால் ரஜினியின்மனம் துயரமடையும் என்பது அவர்களின் பார்வையாக இருக்கிறது. ஏற்கனவே அவரின் இளையமகள் சௌந்தர்வா திருமணமாகி மகன் இருந்த நிலையில் விவகாரத்து பெற்றார். அதன்பின் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே என்ன பிரச்சனை என்பது பற்றிய தகவல்கள் இனிமேல் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.