தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... செல்வராகவன் படத்தில் செம சர்ப்பரைஸ்....
தனுஷை பொறுத்தவரை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த புதுப்பேட்டை, காதல் கொண்டேன் ஆகிய 2 படங்களின் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. அடுத்து இருவரும் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.
இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், அது ஆயிரத்தில் ஒருவன் 2 இல்லை எனவும் கூறினர். எனவே, இருவரின் கூட்டணியை ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதன்பின் அப்படத்தின் தலைப்பு ‘நானே வருவேன்’ எனவும், தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்டு 20ம் தேதி துவங்கும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், கர்ணன் மற்றும் ‘The Grey Man’ என்கிற ஆங்கில படத்தில் நடித்து வந்தார் தனுஷ். அப்படங்கள் முடிந்த பின் தனுஷ் - செல்வராகவன் கூட்டணி இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியானது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது ‘மாறன்’ என்கிற படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டிய நேரத்தில், ‘திருச்சிற்றம்பலம்’ என்கிற படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். மேலும், ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகவுள்ளது.
எனவே, கடந்த ஆகஸ்டு 20 அதாவது நாளை தொடங்கவிருந்த நானே வருவேன் திரைப்படம் தள்ளிப்போனது . எனவே செல்வராகவன் – தனுஷ் இணையும் படம் எப்போது துவங்கும் என்பது தெரியாமல் இருந்தது. மற்றவர்களின் படத்திற்காக தனுஷ் அண்ணனை டீலில் விட்டது செல்வராகவன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
தற்போது ஒருவழியாக அதற்கான நேரம் தனுஷுக்கு வாய்த்துள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முடித்து கொடுத்து விட்டு, மாறன் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார் தனுஷ். அதுவும் வேகமாக முடிந்து விடும் நிலையில், அடுத்து அண்ணன் செல்வராகவன் படத்தில் அவர் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
இதில், தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும், இப்படத்தின் டைட்டிலும் மாற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொடி மற்றும் பட்டாஸ் ஆகிய படங்களில் தனுஷ் டபுள் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.