நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!...தாறுமாறா சம்பளத்தை உயர்த்திய தனுஷ்...

by சிவா |
danush
X

danush

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை முதல் திருச்சிற்றம்பலம் வரை பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் தனுஷ். ஒருபக்கம் சிறந்த கதையம்சம் கொண்ட கதைகளிலும், ஒருபக்கம் கமர்சியல் மசாலா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

danush

danush

துவக்கம் முதலே சிறந்த நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். புதுப்பேட்டை, ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் என அவரின் நடிப்பு மெருகேறிக்கொண்டே போகிறது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்றது.

danush

danush

நடிகர் சிம்பு மற்று சிவகார்த்திகேயன் ஆகியோரை தனக்கு போட்டியாக கருதும் தனுஷ் தற்போது அவர்களை போலவே சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

தனுஷ் இதற்கு முன் ரூ.15 கோடி முதல் ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்கி வந்தார். ஆனால், அவர் அறிமுகம் செய்த சிவகார்த்திகேயன் ரூ.30 கோடி வாங்கினார். எனவே, தனுஷும் ரூ.30 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தினார்.

danush

danush

மாநாடு வெற்றிக்கு பின் நடிகர் சிம்பு தனக்கு ரூ.38 கோடி சம்பளமாக கொடுக்க வேண்டும் என கேட்கிறாராம். அதேபோல், டாக்டர், டான் என மெகா ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் ரூ.40 கோடி கேட்கிறாராம். எனவே, எனக்கும் ரூ.40 கோடி வேண்டும் என தனுஷ் கேட்கிறாராம்.

இதனால் அவரை வைத்து படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் சம்பளத்தை கேட்டு யூடர்ன் அடித்து ஓடுகிறார்களாம்.

சினிமாவில் இதலாம் சகஜமப்பா!...

Next Story