டோலிவுட்ல இருக்குற மனிதாபிமானம் கோலிவுட்ல இல்ல!.. தனுஷை நெருக்கடிக்கு ஆளாக்கும் இந்த ஒரு விஷயம்...

by Rohini |
danush
X

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை மித்ரன் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி இன்று வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையடுத்து தனுஷ் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். நானே வருவேன் படம் வருகிற 29 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு அடுத்த நாள் தான் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இருக்கிறது.

naane varuven

இந்த செய்தி அறிந்து கோலிவுட் வட்டாரத்தில் அனைவரும் ஷாக் ஆனார்கள். பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வனுடன் தனுஷின் படம் எப்படி சமாளிக்க போகிறது என்ற கவலை அனைவருக்குள்ளும் இருக்கிறது. இருந்தாலும் நானே வருவேன் சொன்ன தேதியில் வெளியாகும் என கலைப்புலி தாணு திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதே நிலைமைதான் தெலுங்கு சினிமாவிலும் நடந்தது. ராஜமௌலி இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தின் ரிலீஸ் சமயத்தில் சூப்பர் ஹீரோக்களான பவன்கல்யாண், மகேஷ் பாபு இவர்களின் படங்களும் ரிலீஸுக்காக காத்திருந்தது.

ஆனால், இந்த இருவரின் படங்களின் தேதியையும் தள்ளிப்போட்டு விட்டார்கள். ஆனால் மணிரத்னத்திற்காக பார்க்காவிட்டாலும் தமிழ் மக்களின் கலாச்சாரம், பண்பாடு, வீரம் இவற்றை கருத்தில் கொண்டாவது மாபெரும் காப்பியமாக வெளியாகும் பொன்னியின் செல்வனின் மீதான மரியாதைக்காவது ஒரு வார காலம் நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்கலாம் என கோலிவுட்டில் புலம்பி வருகிறார்கள்.

Next Story