Cinema News
தனுஷுக்கு இவ்வளவு பெரிய மகனா? – ஷாக் ஆன ரசிகர்கள்..
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதன் பின் காதல் கொண்டேன், திருடா திருடி என 3 தொடர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை திரும்பி பார்க்க வைத்தவர். அதன்பின் அவரின் கிராப் இறங்கவே இல்லை.
ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா படங்களிலும், ஒருபக்கம் நடிப்புக்கு தீனி போடும் புதுப்பேட்டை, ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் போன்ற படங்களிலும் அவர் நடித்து வருகிறார். அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் அவர் பெற்றார். இவர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் யாத்ரா. இளைய மகன் லிங்கா.
சமீபத்தில் யாத்ரா தனது பிறந்தநாளை கொண்டாடிய போது, அவரின் தாய் ஐஸ்வர்யா தனுஷ் அவரை கட்டியணைத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். யாத்ராவை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு அப்படியே தனுஷ் மாதிரியே இருக்கிறார். என பதிவிட்டனர். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அது தனுஷ்தான் என நினைத்தனர். ஆனால், அது தனுஷின் மகன் என தெரிந்தபின் மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.
இந்நிலையில், டெல்லியில் இன்று தேசிய விருதை பெற தனுஷ் சென்றிருந்த போது ஐஸ்வர்யா மற்றும் யாத்ரா என அனைவரும் சென்றிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் ‘தனுஷின் மகன் இவ்வளவு பெரிய மகனாக வளர்ந்துவிட்டாரா?’என ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.