இந்த விஷயத்துக்காகவே கமல் சாருக்கு தேசிய விருது கொடுப்பேன்.. தனுஷ் சொல்றத கேளுங்க!..

by rakul kumar |   ( Updated:2023-03-01 16:04:34  )
இந்த விஷயத்துக்காகவே கமல் சாருக்கு தேசிய விருது கொடுப்பேன்.. தனுஷ் சொல்றத கேளுங்க!..
X

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பை பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. அவரின் அசாத்திய நடிப்புத் திறமையைப் பற்றி பல பெரும் நடிகர்களே வானளாவ புகழ்ந்துவிட்டனர்.

வெறும் நடிப்பு என்ற காரணத்திற்காக மட்டுமே அவருக்கு உலகநாயகன் பட்டம் கொடுக்கப்படவில்லை. இயக்கம் மற்றும் நடனத்திலும் அவர் ஜித்து ஜில்லாடி. நடிப்பு தாண்டி திரைக்கதை எழுதுவதில் கைதேர்ந்தவர் கமல்ஹாசன்.

kamal

அவர் திரைக்கதையில் வெளியான தேவர் மகன் திரைப்படம் இன்றும் பல இயக்குனர்களின் பாலபடமாக இருந்து வருகிறது. மேலும் ஹே ராம், விருமாண்டி, தசாவதாரம் என பல படங்களில் திரைக்கதையில் தன் கைவரிசையைக் காண்பித்து பார்ப்போரை வியக்க வைத்தவர் நம் ஆண்டவர்.

எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே உருமாறி பின்னி பெடெலெடுப்பார். தெனாலி படத்தில் அப்பாவியான இலங்கைத் தமிழராக நடித்து ஆடியன்ஸை அழ வைத்திருத்திப்பார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் கமல்ஹாசன் நடிப்பை வியந்து பேசிய போது, ‘தெனாலி’ படத்திற்காகவே நான் அவருக்கு தனியாக தேசிய விருது கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

“மைக்கேல் மதன காம ராஜன் படத்த கமல் சார் எப்படி பண்ணாருனே யோசிக்க முடியல, அவரோட குணா, தெனாலி படத்தை எல்லாம் நான் நடிக்க தகுதியே கிடையாது, தெனாலி காமெடி தான் ஆனா அந்தப் படத்துல நடிக்கிறது ரொம்ப கஷ்டம் அதுக்காக நான் கமல் சார்க்கு தேசிய விருதே தருவேன்” என்று பேசியுள்ளார்.

Next Story