இரு மகன்களுடன் நடிகர் தனுஷ்!…அப்படியே அவர் மாதிரியே இருக்காங்க!…..

Published on: March 19, 2022
---Advertisement---

நடிகர் தனுஷ் 20 வயது இருக்கும் போதே ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 21 வயதில் அவருக்கு பிறந்த மூத்த மகன்தான் யாத்ரா. அதன்பின் 4 வருடங்கள் கழித்து பிறந்தவர் லிங்கா என தனுஷுக்கு 2 மகன்கள்.

சமீபத்தில் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர். எனவே, மகன்கள் இருவரும் சில நாட்கள் தனுஷுடனும், சில நாட்கள் ஐஸ்வர்யாவுடனும் இருந்து வருகின்றனர். மேலும், தங்கள் பெற்றோர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் எனவும் அவர்கள் ஆசைப்படுவதாக செய்திகள் கசிந்தது.

சமீபத்தில், தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படப்பிடிப்புக்காக ஊட்டி சென்ற போன போது தனது மூத்த மகன் யாத்ராவை உடன் அழைத்து சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

danush

இந்நிலையில், நேற்று இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியான ‘ராக் வித் ராஜா’ சென்னையில் நடந்தது. தீவிர இளையராஜா ரசிகரான தனுஷ் தனது மகன்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

danush

இதைப்பார்த்த பலரும் மகன்கள் இருவரும் அப்படியே தனுஷ் போல இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ஆல்பம் பாடலுக்கு தனுஷ் வாழ்த்து சொன்னது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment