யாரை கேட்டு முடிவு பண்ணீங்க? கோபத்தில் அப்பாவிடம் எகிறிய தனுஷ்...!
கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் மிகவும் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒருபுறம் திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகர் தனுஷ் மற்றொரு புறம் சொந்த வாழ்க்கையிலும் சில பிரச்சனை காரணமாக பிசியாக இருக்கிறார்.
ஏனெனில் சமீபத்தில் தான் தனது 18 ஆண்டுகால திரை வாழ்க்கை முடிவிற்கு வருவதாக தெரிவித்து தனது விவாகரத்து செய்தியை அறிவித்திருந்தார். இதனால் கோலிவுட் முழுவதும் மிகவும் பரபரப்பாக இருந்தது. தனுஷும் இந்த விவகாரத்தில் மிகவும் அப்செட்டாக இருந்து வருகிறார்.
மற்றொருபுறம் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க இருவீட்டாரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதவிர ஒரு சில முக்கிய திரைபிரபலங்ளும் இந்த விவகாரத்தில் தலையிட்டு சமாதானம் பேசி வருகிறார்கள். அந்த வகையில் ரஜினி அவரது மகள் ஐஸ்வர்யாவை கடுமையாக திட்டி தனுஷுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதனால் மனமிறங்கிய ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழ்வது தொடர்பாக அவரின் தந்தையான கஸ்தூரிராஜாவிடம் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து கஸ்தூரி ராஜாவும் தனது மகன் தனுஷிடம் சமாதானம் பேசியுள்ளார். அதுமட்டும் இன்றி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் குழந்தைகளுடன் திருப்பதி சென்று வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என கூறியுள்ளார்.
மேலும் இதற்கான ஏற்பாடுகளையும் கஸ்தூரி ராஜா தனுஷை ஆலோசிக்காமல் அவரே தனிப்பட்ட முறையில் செய்துள்ளார். இதனை அறிந்த தனுஷ் யாரை கேட்டு இந்த பயணத்தை முடிவு செய்தீர்கள் என தனது தந்தை கஸ்தூரி ராஜாவிடம் மிகவும் கடுமையாக கோபத்தில் கத்தியுள்ளார். அதுமட்டுமின்றி தனக்கு ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ துளிகூட விருப்பமில்லை என மிகவும் கறாராக கூறிவிட்டாராம்.