சிவகார்த்திகேயன் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் தனுஷ் ரசிகர்கள்…! அப்படி என்ன செய்தார்?

0
287
siva_main

திரையுலகில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சாதிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் சாதாரண ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து தொகுப்பாளராக வளர்ந்து அதன் பின்னர் தற்போது டாப் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரம் எடுத்துள்ளார். தற்போது அவர் வெள்ளித்திரைக்கு வந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

Siva1

இந்நிலையில் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் “இந்த தருணத்தில் எனக்கு முதல் வாய்ப்பினை வழங்கிய பாண்டிராஜ் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.

என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மேலும் வெற்றி, தோல்வி எது வந்தாலும் என்னுடன் இருந்து கொண்டாடும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்” என குறிப்பிட்டிருந்தார்.

siva2

ஆனால் அந்க அறிக்கையில் தனுஷ் பெயரை சிவகார்த்திகேயன் குறிப்பிடவே இல்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் ஆரம்பகாலத்தில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு தனுஷ் பெரியளவில் உதவி செய்திருந்தார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற எதிர்நீச்சல் படம் தான் கோலிவுட்டில் அவரின் கெரியருக்கு ஒரு ஸ்ட்ராங்கான அடித்தளமாக அமைந்தது. அந்த படத்தை தனுஷ் அவரின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இப்படி உள்ள நிலையில் அவருக்கு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை என கூறி சிவகார்த்திகேயனை தனுஷ் ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.

google news