தனுஷை ஒதுக்கியதா ஹாலிவுட் சினிமா? சர்ச்சையாகும் தி கிரே மேன் க்ளிம்ஸ் காட்சிகள்....!

by Rohini |   ( Updated:2022-02-06 10:50:11  )
danush_main
X

தமிழ் நடிகர்கள் தமிழை தாண்டி வேறு மொழிக்கு செல்லும்போது பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். உதாரணமாக பாலிவுட் செல்லும் தமிழ் நடிகர்கள் அங்க நிற வேறுபாடு மற்றும் பாகுபாடு போன்ற பல காரணங்களால் திறமை இருந்தும் ஒதுக்கப்பட்டு வருகிறார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் தமிழை தாண்டி முதல் முறையாக பாலிவுட் சினிமாவில் கால்தடம் பதித்து வெற்றி கண்டவர் தான் நடிகர் தனுஷ். பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கால் தடம் பதித்து தற்போது தெலுங்கு சினிமாவிலும் களம் கண்டு வருகிறார்.

danush1

இந்நிலையில் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கிரே மேன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஹாலிவுட்டில் தனுஷுக்கு இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் தி கிரே மேன் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியானது.

இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே உலகளவில் டிரெண்டானது. பலரும் வீடியோ பார்த்து பாராட்டினார்கள். ஆனால் தனுஷ் ரசிகர்கள் மட்டும் உச்சக்கட்ட கடுப்பில் இருக்கிறார்கள். காரணம் இந்த வீடியோவில் நடிகர் தனுஷின் காட்சிகள் எதுவுமே இடம்பெறவில்லை.

danush2

இதனால் கடுப்பான தனுஷ் ரசிகர்கள் அவர் நடித்த காட்சிகள் இடம்பெறும் வீடியோவை வெளியிடும்படி ட்வீட் செய்து வருகிறார்கள். மேலும் வேண்டுமென்றே தனுஷின் காட்சிகளை வீடியோவில் இடம்பெறாமல் செய்துவிட்டதாகவும், தனுஷை ஒதுக்குவதாகவும் சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

Next Story