Cinema News
துணிவு படம் இந்தளவுக்கு வந்ததுக்கு காரணமே இவர்தான்… யார்ன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க!!
அஜித் நடிப்பில் உருவான “துணிவு” திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் வெளியான நாளில் கொஞ்சம் கலவையான விமர்சனங்களே வெளிவந்தன.
ஆனால் காட்சிகள் செல்ல செல்ல ரசிகர்களை இத்திரைப்படம் பரவலாக ஈர்த்துள்ளது. குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பணத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படத்தின் கதையை உருவாக்கி உள்ளார் இயக்குனர் ஹெச்.வினோத். வங்கிகள் வாடிக்கையாளர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறது, மனிதன் ஏன் பணத்தின் மேல் இவ்வளவு வெறியாக இருக்கிறான்? போன்ற விஷயங்களை மிகவும் தெளிவாக இத்திரைப்படத்தில் எடுத்துக்கூறியிருந்தார் ஹெச்.வினோத்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பணம் குறித்த பல தகவல்களை ஹெச்.வினோத்திற்கு அளித்தது ஒரு பிரபல பொருளாதார நிபுணர்தான் என கூறப்படுகிறது.
அதாவது சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும் ஆனந்த் சீனிவாசன், பணம் குறித்த பல தகவல்களை ஹெச்.வினோத்துடன் பகிர்ந்துகொண்டாராம். அவர் கூறிய பல தகவல்களைத்தான் “துணிவு” திரைப்படத்தில் ஹெச்.வினோத் பயன்படுத்திக்கொண்டாராம்.
இதையும் படிங்க: ஜெய் பீம் இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்??… அடேங்கப்பா இது நம்ம லிஸ்டலயே இல்லையே!!
“துணிவு” திரைப்படம் வெளியான பின்பு, ஆனந்த சீனிவாசனின் “Money Pechu” யூட்யூப் சேன்னலில் இயக்குனர் ஹெச்.வினோத் “துணிவு” திரைப்படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.