ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் டிடி பார்த்த வேலை! கடுப்பாகி உட்கார்ந்த கார்த்தி

Japan Movie Audio Launch: ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அனுஇமானுவேல் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம்தான் ஜப்பான். இந்தப் படம் அடுத்தமாதம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் கோலாகலமாக நடந்தது.

அந்த விழாவிற்கு சத்யராஜ், ஆர்யா, விஷால், ஜெயம்ரவி, தமன்னா, போன்ற திரையுலக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். சூர்யா முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். ஜப்பான் திரைப்படத்தின் டிரெய்லரையும் சூர்யாதான் வெளியிட்டார்.

இதையும் படிங்க: கார்த்திக்கின் நட்புக்காக நெப்போலியன் செஞ்ச அந்த காரியம்!. அட இது வேற வேற லெவல்!..

கார்த்தியின் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த ஜப்பான் திரைப்படம் அவருக்கு 25வது திரைப்படமாகும். இதுவரை கார்த்தி பல நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் இந்த ஜப்பான் திரைப்படமும் ஒரு நல்ல கதைகளத்தோடு வருவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

அஜித், விஜய் இவர்களுக்கு அடுத்தபடியான இடத்தை பிடிக்க போட்டி போடும் நடிகர்கள் மத்தியில் மிகவும் கூலாக தன்னுடைய கதை மீது மட்டுமே நம்பிக்கை வைத்து அவர் வழியில் போய்க் கொண்டிருக்கிறார் கார்த்தி.

இதையும் படிங்க: இதுக்காச்சும் இது நடந்துச்சே..! மூச்சு விட்ட லியோ படக்குழு..! இனி ஆட்டம் அதிரடியா இருக்கும்..

இந்த நிலையில் நேற்று நடந்த விழாவில் எந்தவொரு கலவரமும் இல்லாமல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் ஒரு சிறிய தவறு நடந்து விட்டதாகவும் ஒரு செய்தி வெளியானது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது பிரபல தொகுப்பாளினி டிடியும் மா.கா.பா.ஆனந்தும் தான்.

எப்பவுமே ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவரை நிகழ்ச்சியின் கடைசியில்தான் பேச அழைப்பார்கள். ஆனால் டிடி நிகழ்ச்சியின் இடையிலேயே சூர்யாவை பேச அழைத்திருக்கிறார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் சூர்யாவின் ரசிகர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: புருஷன் பிக்பாஸ் வீட்டில் கண்ணீரில் ரச்சிதா… வைரலாகும் இன்ஸ்டா பதிவு..! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்..!

இதனால் சூர்யா பேசி முடித்தவுடன் பாதி ரசிகர்கள் கிளம்பிவிட்டார்களாம். இதில் கார்த்தி கொஞ்சம் அப்செட்டில் இருந்ததாகவும் தெரிகிறது. கார்த்தி மேடைக்கு பேச வரும் போது ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள்தான் இருந்திருக்கிறார்கள்.

 

Related Articles

Next Story