Connect with us

விக்ரம்-காக ரெடியாகிவிட்டார் டிடி.! இவங்க அலப்பறை சும்மாவே தாங்காது இதுல இவரும் கூட நிக்கிறாரா?

Cinema News

விக்ரம்-காக ரெடியாகிவிட்டார் டிடி.! இவங்க அலப்பறை சும்மாவே தாங்காது இதுல இவரும் கூட நிக்கிறாரா?

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து உள்ளார். உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் வாங்கி வெளியிடுகிறார்.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விக்ரம் இசை வெளியீட்டு விழாவின் அனுமதிச் சீட்டு வாங்கி நேரு உள்விளையாட்டு அரங்கில் காத்திருக்கின்றனர். விரைவில் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் தொகுத்து அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளதாம். நேரடி ஒளிபரப்பு கிடையாதாம். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினி டிடி ஆயத்தமாகி வருகிறார்.

அதற்கான புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் உலகநாயகன் கமலஹாசனுடன் தேடி இருக்கிறார். அதற்கு கீழே, ‘ எத்தனை முறை பார்த்தாலும் பக்தாது. இவரிடம் இன்னும் நிறைய கற்று கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன் – விக்ரம் இசை வெளியீடு : பேரதிர்ச்சியூட்டும் செய்தி வெளியானது.! அந்த விஷயம் நிச்சயம் நடக்காதாம்.!

டிடி சும்மாவே நிறைய பேசுவார். இன்று உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் என முக்கிய நடிகர்கள் வருவார்கள். அது போக ரஜினிகாந்த் விஜய் சூர்யா போன்ற நடிகர்கள் வருவார்கள். என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்து விட்டால், நிச்சயமாக தொகுப்பாளினி டிடி கையில் பிடிக்க முடியாது என்று பலரும் சிலாகித்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top