எவ்ளோ நாள் தான் தனியா இருக்கிறது...!அந்த ஹீரோவுக்கு கொக்கி போடும் டிடி..!
விஜய் டிவி தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார் தொகுப்பாளினியும் நடிகையுமான திவ்யதர்ஷினி என்கிற டிடி. மிகச்சிறு வயதிலயே மீடியாவிற்குள் வந்தவர் டிடி. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளை டிடி தான் தொகுத்து வழங்கி வந்தார்.
இவர் இல்லாத நிகழ்ச்சிகளே இருக்காது விஜய் டிவியில். மேலும் மக்களுக்கு பிடித்த அபிமான ஆங்கராகவும் இருந்து வருகிறார். தற்பொழுது விருது வழங்கும் விழா, ஆடியோ லான்ஞ் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் கூட சுந்தர்.சியின் படமாக காஃபி வித் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், டிடி உட்பட பலரும் நடித்திருக்கும் இந்த படம் நகைச்சுவை கலந்த குடும்ப படமாக உருவாகி வருகிறது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான தி கிரே மேன் என்ற படத்தில் நடித்தவரும் bridgerton என்ற படத்தின் ஹீரோவுமான ரேஹே ஜீன் பேஜ் என்ற நடிகரின் வாட்ஸ் ஆப் நம்பரை வாங்கித்தரும் படி தனுஷிடம் கேட்டு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.