எல்லாம் ஒரு மாதிரியா பாத்துட்டு போறாங்க...! துபாயில் தனியாக விடுமுறையை கழிக்கும் டிடி..!

by Rohini |
DD_main_cine
X

திவ்யதர்ஷினி "டிடி" விஜய்தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார். ஆரம்பத்தில் நடிகையாக அறிமுகமான அவர், கமல்ஹாசனின் தயாரிப்பு நள தமயந்தி உள்ளிட்ட படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.

dd1_cine

தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றுவதற்கு முன்பு, ராடன் மீடியா நிறுவனங்களான செல்வி மற்றும் அரசியில் தனது நடிப்பிற்காக கவனத்தை ஈர்த்தார். 2007 ஆம் ஆண்டு முதல், அவர் தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

மேலும் 2014 ஆம் ஆண்டு தனது சொந்த நிகழ்ச்சியான காஃபி வித் டிடியை தொகுத்து வழங்கத் தொடங்கினார். அவர் திரைப்படங்களில் டப்பிங் கலைஞராகவும் பங்களித்துள்ளார்.விஜய் டிவியில் பல ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். அவர் ஜோடி நம்பர் ஒன் ஆரம்ப சீசன்களை தீபக் மற்றும் அரவிந்த் ஆகாஷுடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.

dd2_cine

தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழும் டிடி தனது விடுமுறையை ஜாலியாக துபாயில் கழித்து வருகிறார். மேலும் அங்கு தான் போகும் இடங்களில் எல்லாம் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்க்ளை சந்தோஷப்படுத்தி வருகிறார்.

அந்த வீடியோ இதோ: https://www.instagram.com/reel/CaFOU0TgoKa/?utm_source=ig_web_copy_link

Next Story