அப்படி அவர்கிட்ட எதுதான் ஈர்த்துச்சு? எல்லாரும் கேட்கும் கேள்வி.. கணவர் குறித்து தேவயாணி பேட்டி

by Rohini |   ( Updated:2025-05-05 04:55:59  )
devayani
X

devayani

Devayani: பெரும்பாலும் திருமண வீடுகளில் நடக்கும் ஒரு விவாதம் என்னவெனில் பெண்ணுக்கு மாப்பிள்ளை காணாது அல்லது மாப்பிள்ளைக்கு பெண் காணாது. இந்த வார்த்தைகள் தான் பெரும்பாலானோர் உச்சரிக்கும் வார்த்தையாக இருக்கும். என்னதான் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றாலும் மாப்பிள்ளையும் பெண்ணும் ஒன்று போல அனைவரையும் கவர்ந்திட முடியாது. அந்த வகையில் தான் தேவயானி ராஜகுமாரன் திருமணமும் அமைந்தது .மும்பையில் இருந்து வந்தாலும் தேவயானியை தமிழ்நாட்டு மக்கள் தன்னுடைய வீட்டுப் பிள்ளையாகவே பார்க்க ஆரம்பித்தனர்.

அந்த அளவுக்கு அவருடைய நடிப்பும் அழகும் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. திடீரென இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார் என்ற ஒரு செய்தி பரவியதும் அனைவரும் சொன்னது ராஜகுமாரனையா திருமணம் செய்தார் தேவயானி என்று தான் கேட்டனர். அந்த அளவுக்கு தேவயானி அளவுக்கு இல்லையே என்று அனைவருமே வருத்தப்பட்டதுண்டு. ஆனால் இன்று அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக கழித்துக் கொண்டு வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து தன்னுடைய மகள்களுக்காகவும் குடும்பத்திற்காகவும் விட்டுக் கொடுத்து பரஸ்பரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

முதன் முதலில் ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க அந்த படம் இன்று வரை ரிலீஸ் ஆகவில்லை என தேவயானி கூறினார். அதன் பிறகு தெலுங்கில் ஒரு படத்தில் நடித்தார். தமிழில் தொட்டா சிணுங்கி திரைப்படத்தில் தான் முதன் முதலில் அறிமுகமானார் தேவயானி. அந்த படத்திற்கு பிறகு அஜித்துக்கு ஜோடியாக காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்படி தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வந்த தேவயானி நீ வருவாய் என திரைப்படத்தில் ராஜகுமாரன் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

அதற்கு முன்பு சூரியவம்சம் படத்தில் ராஜகுமாரன் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அப்போது அவர்களுக்கு நெருக்கமான பழக்கம் இல்லை. நீ வருவாய் என படத்தை எடுக்கும் பொழுது தான் இருவருக்குமே காதல் மலர்ந்திருக்கிறது. இந்த நிலையில் எப்படி ராஜகுமாரன் காதல் வலையில் விழுந்தீர்கள் என்ற ஒரு கேள்வி தேவயாணியிடம் கேட்க அதற்கு நீ வருவாய் என படத்தில் அவர் எழுதிய வசனத்தால்தான் நான் அவரிடம் மயங்கினேன் என கூறி இருக்கிறார் தேவயானி. ஏனெனில் ஒரு நல்ல இதயம் கொண்ட மனிதர் ஒரு நல்ல படைப்பை கொடுக்க முடியும் .

devayani

அப்படித்தான் நீ வருவாய் என படம் ஒரு காதல் என்சைக்ளோபீடியாவாக இருந்தது. அதனால் இவருக்குள்ளும் நல்ல காதல் இருக்கும் என்று நான் நம்பினேன். அதுமட்டுமல்ல அந்த படப்பிடிப்பின் போது என்னை அவர் கவனித்துக் கொண்ட விதம் ஒரு பெண்ணிடம் எந்த அளவுக்கு பழக வேண்டும் மரியாதையாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவரிடம் நான் பார்த்தேன். அவருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது .இந்த மாதிரி கேரக்டர்களால் தான் அவரை எனக்கு மிகவும் பிடித்தது.

ஆனால் முதன்முதலில் அவர்தான் எனக்கு காதல் சொன்னார். அப்போது நான் நோ என்றுதான் சொன்னேன். என்னுடைய வீட்டில் சம்மதிக்க மாட்டாங்க அப்படின்னு தான் நான் சொன்னேன். ஆனால் எப்படி இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்தேன் என இதுவரை எனக்கு தெரியவில்லை. ஏனெனில் என்னுடைய அம்மா அப்பாவை மீறி நான் எந்த ஒரு செயலும் செய்ததே கிடையாது .முதன் முறையாக இவருக்காக என் வீட்டு படியேறினேன் என தன்னுடைய காதலை குறித்து மனம் திறந்து இருக்கிறார் தேவயானி.

Next Story