Connect with us

Cinema News

அடடே அவங்களா!.. ஜவான் படத்தில் நயன்தாரா குரலை கெடுக்காம பார்த்துக் கொண்ட அட்லீ!..

இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் ஹீரோயின் நயன்தாராவின் தமிழ் டப்பிங் பக்காவாக இருக்க காரணமே அந்தப் சீரியல் பிரபலம் தான் என்கின்றனர்.

ஷாருக்கானின் ஜவான் படம் ஹிந்தி படமாக இருந்தாலும் தியேட்டரில் படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு அது ஒரு பக்காவான தமிழ் படத்தை பார்த்த பீலிங்கை கொடுத்துள்ளது. அதற்கு காரணம் அந்த படத்தில் ஷாருக்கானை தவிர்த்து வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக நயன்தாராவும், காமெடிக்கு யோகிபாபுவும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணியும் நடித்ததுதான் என்கின்றனர்.

இதையும் படிங்க: என்னடா இது லேடி சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை!.. நயன்தாராவுக்கு நறுக்கென குட்டு வைத்த ஷாருக்கான்!..

மேலும் இயக்குனர் அட்லி தமிழ் சினிமா ரசிகர்களை மாற்றக் கூடாது என்பதற்காக டப்பிங்கில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை என்ன படம் பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பாலிவுட் படம் என்றாலும் லேடீஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் குரலுக்கு பங்கம் விளைவிக்காத வண்ணம் வழக்கமாக அவருக்கு குரல் கொடுக்கும் பிரபல சின்னத்திரை நடிகையும் டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் தான் இந்த படத்திற்கும் நயன்தாராவுக்கு குரல் கொடுத்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, பிகில், மற்றும் ஜவான் உள்ளிட்ட அனைத்து படங்களுக்கும் நயன்தாராவுக்கு தீபா வெங்கட் தான் வாய்ஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சல் படத்திலும் தீபா வெங்கட் வாய்ஸ் கொடுத்துள்ளதாக தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐஸ்கிரீமை காட்டி குழந்தையை ஏமாத்துற மாதிரிதான்! இத வாங்கிக் கொடுத்து ஜோதிகாவை ஆடவைத்த கலா

இயக்குனர் அட்லீயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஜவான் படத்திற்கும் நயன்தாராவுக்கு குரல் கொடுக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top