தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ள தமிழ்ப்படங்கள் - ஒரு பார்வை
தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசுக்கு அடுத்தபடியாக விளங்குவது புதுப்படங்கள் தான். சாதாரண நாள்களில் வெளியாகும் படங்களை விட தீபாவளி அன்று வெளியாகும் படங்களுக்கு மவுசு அதிகம். சின்ன நடிகர்கள் படங்கள் என்றாலும் அன்று புதுப்படம் பார்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பார்த்து விட்டு வருவார்கள்.
பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் போது பல சின்ன பட்ஜெட் படங்கள் ரீலீஸாகாமல் ஒதுங்கிக் கொள்ளும். முன்பெல்லாம் தீபாவளி பண்டிகை என்றால் அன்று தான் படங்கள் வெளியாகும். ஆனால் இப்போது அப்படி அல்ல.
3 நாள்கள், 4 நாள்களுக்கு முன்னரே படங்கள் ரிலீஸாகி விடுகின்றன. அதனால் அவர்கள் கணிசமான வசூலை தீபாவளியையொட்டி எட்டி விடுகின்றனர். இனி இந்த ஆண்டில் வரப்போகும் புத்தம்புது படங்கள் எவை எவை என பார்ப்போமா...
பிரின்ஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் படம் அக்.21ல் வெளியாகிறது. இந்தப்படம் சிறுவர்களைக் கவரும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக மரியா ரியபோசப் நடித்துள்ளார். சத்யராஜ் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்தியப் பையன் பிரிட்டிஷ் பெண்ணைக் காதலிக்கிறான் என்பதே கதை.
காமெடி இந்தப்படத்தில் புதிய பாணியில் வருகிறதாம். இந்தப்படத்தைப் பற்றி சிவகார்த்திகேயன் சொல்கிறார். படத்தில் காமெடியில் கவுண்டர் பண்ணாமல் சம்பந்தமே இல்லாமல் வேறொரு பதில் மற்றும் சில்லியான பதில் என கலாய்த்திருக்கிறோம். அதே போல் படத்தில் காட்டப்பட்ட ஊரும் தமிழகத்தில் இல்லை. அது ஒரு கற்பனை ஊர்.
அங்குள்ள மக்கள் மற்றும் காதல் பற்றி ஜாலியாக படத்தில் சொல்லப்பட்டுள்ளது. படம் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக இருக்கும் என்கிறார். ஒரே ஒரு சண்டை தான் படத்தில் உண்டு. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சர்தார்
கார்த்திக் இரட்டை வேடங்களில் நடித்த படம் சர்தார். பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இது ஒரு ஸ்பை ஜானர் படம். ராஷிகன்னா, ராஜிஷா விஜயன் மற்றும் சுங்கி பாண்டி உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இது அக்.21ல் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இந்தப்படம் ரிலீஸாக உள்ளது.
பிளாக் ஆடம்
பொதுவாக ஹாலிவுட் படம் என்றாலே ஒரு சுவாரசியமும் எதிர்பார்ப்பும் நமக்குள் வரும். படத்தில் தமிழ்ப்படங்களில் காண முடியாத துணிச்சல், சண்டைக்காட்சிகள், ஆக்ஷன் என எல்லாமே இருக்கும்.
அந்த வகையில் இந்தத் தீபாவளி விருந்தாக வருகிறது பிளாக் ஆடம். தி ராக்கோட நடிப்புல வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளிவருகிறது. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அக்.20ம் தேதி வெளியாகிறது.
ஹர் ஹர் மகாதேவ்
மராத்தில ஒரிஜினலா எடுக்கப்பட்ட ஹர்ஹர் மகாதேவ் என்ற படம் தமிழ் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்தப்படம் அக்.25ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப்படம் மராட்டிய மன்னர் சத்ரபதி வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவாக சுபோத் பாவே நடித்துள்ளார். சோனாபாய் தேஷ்பாண்டேவாக அம்ருதா கான்வில்கார் நடித்துள்ளார்.
ராம் சேது
அக்ஷய் குமார் நடிப்பில் ராம் சேது என்ற படம் இந்தில ஒரிஜினலா எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அக்.25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆஹா தமிழ் என்ற ஓடிடி தளத்தில் பேட்டைக்காளி என்ற படம் கலையரசன் நடிப்பில் வெப்சீரிஸா வெளியாகிறது. இந்த சீரிஸோட இயக்குனர் வெற்றிமாறன். இந்த வெப்சீரிஸ் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.