Connect with us

Cinema History

மனதை விட்டு மறக்க முடியாத தீபாவளி பாடல்கள்

தீபாவளி என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒரு விசயம்தான். ஒரு வீட்டில் சின்னதாக ஒரு கல்யாணம் நடந்தால் அத்தகைய மகிழ்ச்சியை எல்லோருக்கும் கொடுக்க கூடியது, புத்தாடைகள் எடுக்க, பட்டாசு வாங்க, பலகாரங்கள் சுட, ஸ்வீட்ஸ்கள் வாங்க என ஒரு வாரத்துக்கு முன்பே தீபாவளி களைகட்டி விடும். அப்படிப்பட்ட தீபாவளிக்கு இனிமை சேர்ப்பது சினிமா, சினிமாவில் தீபாவளிக்கென்று ஒரு பாடல் இருந்தால் அது அடுத்தடுத்த தீபாவளிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே விளம்பரங்களிலும் ஏனைய பொழுதுபோக்கு அம்சங்களிலும் டிக் டாக் செய்யவும் ஸ்ம்யூலில் பாடவும் என அந்த பாடல்களே எல்லாவற்றிலும் பிரதானமாக இடம்பிடிக்கும்.

கீழ் குறிப்பிடபோகும் பாடல்கள் வந்த காலத்தில் தீபாவளி கொண்டாடிய 80ஸ் கிட்ஸ்கள் அந்த காலகட்டங்களில் தலை தீபாவளி கொண்டாடிய புதுமண தம்பதிகளுக்கு இப்பாடல்கள் மறக்க முடியாத பாடல்களாய் இருக்கும்.

அந்த வகையில் வெளியாகி 36 வருடங்கள் ஆனாலும் தீபாவளி என்று வந்துவிட்டால் இந்த பாடல்தான் இன்னும் டிரெண்டிங்கில் முதலில் உள்ளது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்த பூவே பூச்சூடவா படத்தில் சுட்டித்தனம் செய்து பட்டாசு விடும் நதியாவுக்காக சின்னக்குயில் சித்ரா பாடிய அந்த ஸ்வீட் பாடல்தான் தீபாவளி ஸ்வீட்டை விட தேனாக இனிக்கிறது.

அந்த பாடல்தான் பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா என்ற அந்த பாடல். இன்றே தீபாவளி வந்து விட்டால் சில விளம்பர நிறுவனங்கள் இப்பாடலை உல்டா செய்து விளம்பரங்கள் செய்வதும், பல இடங்களில் இப்பாடல் மட்டுமே தீபாவளிக்கு முக்கிய பாடலாய் ஒலித்து கொண்டிருக்கிறது.

வைரமுத்துதான் இந்த பாடலை எழுதிய கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வீட்டு மாடிக்கு ஆரியபட்டா அனுப்பட்டா என்ற அழகான வரிகளை எல்லாம் சின்னக்குயில் சித்ரா அழகாக பாடி இருந்தார்.

தீபாவளி பாடல்களில் அதற்கு அடுத்தாற்போல் சிறப்பு பெறுவது நாயகன் படத்தில் வரும் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடல். இப்பாடலை இசைஞானி இளையராஜா வழக்கமான பாடகிகள் அல்லாமல் அந்தக்காலத்தில் புகழ்பெற்ற பாடல்களை பாடிய ஜமுனாராணி, எம்.எஸ் ராஜேஸ்வரி போன்ற பாடகிகளை பாட வைத்திருந்தார். 1987ல் வெளியான நாயகன் படத்தில் இடம்பெற்றுவிட்ட இந்த பாடலும் தீபாவளி மோடை ஒரு மாதத்திற்கு முன்பே ஆன் செய்து வைத்துவிட்டு போய் விடுகிறது.

அது போல் அந்த காலத்தில் வெளியான ப்ளாக் அண்ட் ஒயிட் பாடல்தான்  உன்னை கண்டு நான் ஆட என்னை கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி பாடல் இந்த பாடலும் மிக புகழ்பெற்ற பாடலாகும் தீபாவளி நிகழ்ச்சிகளில் இந்த பாடல் ஒலிக்காத இடங்களே இல்லை என கூறலாம். இந்த பாடலுக்கு ஏ.எம் ராஜா இசையமைத்திருந்தார்.

தீபாவளி மோடை ஆன் செய்து மக்களை உற்சாக மனநிலைக்கு கொண்டு செல்வதற்கென்றே பல பாடல்கள் உள்ளன.

சிவகாசி படத்தில் இடம்பெற்ற தீபாவளி தீபாவளி, நான் புடிச்ச மாப்பிள்ளை என்ற படத்தில் இடம்பெற்ற தீபாவளி தீபாவளிதான் போன்ற் பாடல்கள் மற்றும் இளையராஜா இசையமைத்த ரமணா படப்பாடலான வானம் அதிரவே போன்ற பாடல்கள் உள்ளன இருந்தாலும் முதலில் சொன்ன மூன்று பாடல்களே தீபாவளி போன்றவைக்கு இன்றும் மனதில் நிற்க கூடிய பாடல்களாகும்.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top