கர்ப்ப வயிற்றுடன் கல்கி பட புரமோஷனில் பங்கேற்ற பிரபல நடிகை!.. கமல்ஹாசன் அந்த ரோலில் நடிக்கலையா?..

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து பிரபலமானார். அந்த படம் அவருக்கு பேன் இந்தியா நடிகர் அந்தஸ்தை பெற்ற தந்தது. அந்தப் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் உருவான சாஹோ திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஃபிளாப் ஆனது. பாலிவுட் ஹீரோயின் ஸ்ரதா கபூர், கோலிவுட் நடிகர் அருண் விஜய் என பல்வேறு மாநிலங்களில் இருந்து நடிகர்களை கொண்டு உருவான அந்த படம் சொதப்பி விட்டது.

அதன் பின்னர் தெலுங்கில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான ராதேஷ்யாம் திரைப்படமும் பிரபாஸுக்கு மிகப்பெரிய தோல்வியையே கொடுத்தது. இதிகாசமான ராமாயணத்தை வைத்து படம் எடுத்து கல்லா கட்டிவிடலாம் என நினைத்த பிரபாஸ் பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் அனுமானுக்கு தியேட்டரில் ஒரு சீட் கொடுங்க என்றெல்லாம் இயக்குனர் ஓவர் பில்டப் செய்து வெளியிட்ட நிலையில், ஒட்டுமொத்த தியேட்டரும் படத்தின் தரம் காரணமாக காலியாகவே இருந்தது பிரபாஸை நோகடித்து விட்டது.

இதையும் படிங்க: செப்டம்பரில் மாநாடு!. 10 லட்சம் பேர் டார்கெட்!.. தளபதி விஜய் போடும் பக்கா ஸ்கெட்ச்!..

இந்நிலையில், கல்கி அவதாரத்தை குறிப்பிடும் வகையில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் வரும் ஜூன் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை சாவித்திரியின் பயோபிக்கான மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மும்பையில் இன்று நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் மற்றும் கர்ப்பவதியான தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். தீபிகா படுகோன் படத்திற்கு புரமோஷன் செய்யாமல் இருந்து வந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுள்ளார். கருப்பு நிற உடையில் பேபி பம்ப் தெரியும் அளவுக்கு உடை அணிந்து நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: சொன்னதும் அஜித்தும் விஜய் சேதுபதியும் ஓடி வந்தாங்க.. அந்த மனசுதான் சார் கடவுள்! பிரபலம் சொன்ன சீக்ரெட்

உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில், படத்தில் அவர் கலி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றும் சுப்ரீம் யாஷ்கின் எனும் கதாபாத்திரத்தில் மெயின் வில்லனாகவே அவர் தான் நடித்துள்ளார் என்பதையும் ரிவீல் செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை பாகுபலி பட வில்லன் ராணா டகுபதி தொகுத்து வழங்கினார்.

 

Related Articles

Next Story