Cinema News
டிரெஸ் போட்டு இருக்காரா இல்லையா? உடலை ஒட்டிய ஆடையுடன் கிளாமர் யோகா செய்யும் தீபிகா படுகோன்!
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோன் கெஹ்ரையான் படத்திற்கு பிறகு முற்றிலுமாக கவர்ச்சி பக்கம் திரும்பி விட்டார் என்றே தோன்றுகிறது.
பத்மாவத், சப்பாக் என உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து வந்த தீபிகா படுகோன் சமீப காலமாக தனது ரூட்டை மாற்றிக் கொண்டார். பாலிவுட்டில் ஆலியா பட், திஷா பதானி என இளம் நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், கிளாமர் பக்கம் சென்றால் தான் இனிமே ஜீவிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டார் போல, வித விதமான ஹாட் போட்டோக்களை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்.
ரன்வீர் சிங் உடன் நடந்த திருமணத்திற்கு பிறகு சுடிதார் மற்றும் சேலை அணிந்து நடித்து வந்த தீபிகா படுகோன் ஓடிடியில் வெளியான கெஹ்ரையான் படத்தில் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்து அனல் மூட்டினார்.
இந்நிலையில், தற்போது உடலை ஒட்டியபடி உள்ள டைட் ஜிம் ஷூட் அணிந்து கொண்டு ரிஸ்க்கான பல யோகாக்களை செய்து தான் எப்படி இவ்வளவு பென்சில் ஃபிட்டாக இருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தி உள்ளார்.
கைகளை முறுக்கியபடியும் முன்னழகை நிமிர்த்துக் காட்டியபடியும் தீபிகா படுகோன் வெளியிட்டுள்ள கவர்ச்சியின் உச்சம் தொட்ட இந்த ஹாட் புகைப்படங்கள் வெளியிட்ட நொடியிலேயே மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டாகி வருகின்றன.
இன்ஸ்டாகிராமில் ஆறரை கோடி ரசிகர்கள் நடிகை தீபிகா படுகோனை பின் தொடர்ந்து வருகின்றனர். தீபிகா படுகோனின் இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து பாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி இயக்குநர் ஷங்கரின் மகள் விருமன் பட ஹீரோயின் அதிதி ஷங்கர் வரை ஸ்டன்னாகி லைக் போட்டு வருகின்றனர்.
அடிடாஸ் இந்தியா நிறுவனத்துக்கான விளம்பரத்துக்காகத் தான் திடீரென இப்படி இத்தனை கடினமான யோகா போஸ்களை செய்து அசத்தி உள்ளார் தீபிகா படுகோன். இந்த விளம்பரத்திற்காக பல கோடி ரூபாய் நடிகை தீபிகா படுகோனுக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.