More
Categories: Cinema News

Delhi ganesh: கமல் படங்களில் தவறாமல் இடம்பிடித்த டெல்லிகணேஷ்… பின்னணி இதுதான்..!

வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவர் உலகநாயகன் கமலின் நெருங்கிய நண்பர். அவரது படங்களில் தவறாமல் இடம்பிடித்து விடுவார்.

Also Read: Delhi Ganesh: பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி

Advertising
Advertising

நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, தெனாலி, பாபநாசம் ஆகிய படங்களைச் சொல்லலாம். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவரது இழப்பு திரையுலகினரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

குணச்சித்திரம்

யதார்த்தமான நடிப்புக்குச் சொந்தக்காரர். காமெடியிலும் பட்டையைக் கிளப்புவார். உதாரணத்திற்கு அவ்வை சண்முகியில் அவர் செய்த கதாபாத்திரம் அவ்வளவு அற்புதமாக இருக்கும். சேதுராம ஐயராக வரும் அவர் அவ்வை சண்முகி கமலையே சுற்றிச் சுற்றி வருவார். அதே போல காமெடி, வில்லன், குணச்சித்திரம் என எந்தக் கேரக்டரைக் கொடுத்தாலும் அசத்தி விடுவார்.

மாநில அரசின் விருது, கலைமாமணி ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கமல் குறித்து டெல்லி கணேஷ் சொன்னது இதுதான்… எனக்கு கமல் மீது மரியாதை அதிகம் என்று டெல்லி கணேஷ் அடிக்கடி சொல்வார்.

கமல் சொன்ன வார்த்தை

Avvai shunmughi

நானும் கமலும் ப்ரண்ட்ஸ்னு சொல்ல முடியாது. இந்தியன் 2ல நடிக்கும்போது பார்த்தேன். கமலை முதன்முதலாப் பார்க்கும்போது நான் உங்களோட ஃபேன்னு சொன்னேன்.

ஐ எம் யுவர் ஃபேன்னு கமல் சொன்னார். கமலோட பர்த் டேக்குப் போயிருக்கேன். அவரோட பங்ஷன் எல்லாத்துலயும் அட்டென்ட் பண்ணுவேன். இன்னைக்கு ஓரளவுக்கு பாப்புலரா ஆனதுக்கு கமல் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

30 வருட நட்பு

கமலுக்கும் இவருக்குமான நட்பு 30 வருடங்களுக்கு மேல் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. ராஜபார்வை படத்தில் நடிக்க அழைப்பு வந்த போது தான் முதன்முதலாக அவரைப் பார்த்து இருக்கிறார் டெல்லி கணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ரஜினிக்கே விபூதி அடிக்கப்பார்த்த லைக்கா!.. வேட்டையன் படத்தில் நடந்த அந்த சம்பவம்…

கமலைப் பொருத்தவரை திறமை எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடிப்பதில் கில்லாடி. அப்படித் தான் அவரைத் தவறாமல் தன் படங்களில் நடிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
sankaran v