புதுமையா வேணும்னா ஊர் மேய போக முடியுமா? – நிருபரின் கேள்வியால் கடுப்பான டெல்லி கணேஷ்!..
தமிழில் உள்ள பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் டெல்லி கணேஷ். அவரது இளமை காலங்களில் துவங்கி வயதான காலம் வரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருபவர் டெல்லி கணேஷ்.
பொதுவாக நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு பழக்கம் உண்டு. தமிழ் திரை துறையில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களை தொடர்ந்து அவரது திரைப்படங்களில் பயன்படுத்திக் கொள்வார் கமல்ஹாசன். அந்த வரிசையில் நடிகர் டெல்லி கணேசுக்கும் முக்கிய பங்கு உண்டு. அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள் இப்படி கமல் நடித்த பல படங்களில் டெல்லி கணேஷை பார்க்க முடியும்.
டெல்லி கணேஷின் தனிப்பட்ட நடிப்பை கண்டு வியந்த கமல் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் டெல்லி கணேஷை நடிக்க வைத்தார் தற்சமயம் தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
இயக்குனர் விசுவின் மீது பெரும் விருப்பம் கொண்டவர் டெல்லி கணேஷ். ஒரு பேட்டியில் விசு குறித்து டெல்லி கணேசனிடம் பேசும்போது குடும்ப அமைப்பை குறித்து மிகவும் பழமைவாத கருத்துக்களை விசு தனது படங்களில் பேசியுள்ளார். அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த டெல்லி கணேஷ் அது பழமைனா அப்ப புதுமையா மட்டும் என்ன செய்கிறீர்கள், எல்லாம் ஊர் மேய போய்ட்டாங்களா அதுதான் புதுமையா? எந்த காலமாக இருந்தாலும் குடும்ப அமைப்பு முறை என்பது இயக்குனர் விசு சொன்னது போல் தானே இருக்கும் என்று நிருபரின் கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் டெல்லி கணேஷ்.