டிமாண்ட்டி காலனி 2 முதல் நாள் வசூல் எவ்வளவு?!.. வாங்க பார்ப்போம்!...

by சிவா |   ( Updated:2024-08-16 04:53:04  )
demante
X

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அருள்நிதி. சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் கதைகளில் அதிகம் நடிக்கும் நடிகர் இவர். மௌன குரு, டைரி, தேஜாவு, டி பிளாக் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த படங்கள் எல்லாமே ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து 2015ம் வருடம் வெளியான திரைப்படம்தான் டிமாண்டி காலணி. சஸ்பென்ஸ் திரில்லர் ஹாரராக வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வழக்கமாக தமிழ் சினிமாவில் பேயை காட்டுவது ஒரே மாதிரி இருக்கும்.

ஆனால், இந்த படத்தில் ஒரு வெள்ளைக்காரரை பேயாக காட்டி இருந்தார் அஜய் ஞானமுத்து. இதுவே ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும் ‘நீயெல்லாம் பொறந்ததே வேஸ்ட்’ என்கிற வசனம் மீம்ஸாக இப்போதும் சமூகவலைத்தளங்களில் சுற்றி வருகிறது.

demantee

இந்நிலையில்தான், டிமாண்ட்டி காலணி 2 படம் வெளியாகியிருக்கிறது. அருள்நிதியும், பிரியா பவானி சங்கரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். டிமாண்ட்டி காலணியின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதால் 2ம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் எல்லோரையும் திருப்திபடுத்தும்படி படம் வெளியாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடைசியாக வெளியான கோப்ரா படம் வெற்றியை பெறவில்லை. எனவே, இந்த படத்தை சொல்லி அடித்திருக்கிறார். படத்தில் சில குறைகள் இருந்தாலும் மொத்தமாக இப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. நேற்று சியான் விக்ரமின் தங்கலான் படம் வெளியான நிலையில் அதோடு டிமாண்ட்டி காலணி 2 படமும் வெளியானது.

இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் இப்படம் தமிழகத்தில் 4 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. 3 நாட்கள் வார இறுதி நாட்கள் வருவதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story