“கோப்ராவில் விட்டதை பார்ட் 2-ல பிடிக்கனும்”… அதிரடியாக களமிறங்கிய அஜய் ஞானமுத்து…

Cobra
கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “டிமாண்டி காலனி”. இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க ஹாரர் திரைப்படமாக “டிமாண்டி காலனி” அமைந்தது.

Demonte Colony
இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து “இமைக்கா நொடிகள்” என்ற சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

Imaikkaa Nodigal movie
இதனை தொடர்ந்து சீயான் விக்ரமை வைத்து “கோப்ரா” திரைப்படத்தை இயக்கினார் அஜய் ஞானமுத்து. இத்திரைப்படம் பல இழுபறிகளைத் தாண்டித்தான் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இத்திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக எழுந்தது.
மேலும் இத்திரைப்படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் ரசிகர்களின் பொறுமைக்கு சோதனையாக முடிந்தது. எனினும் அதன் பின்பு இத்திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டது. ஆனாலும் இத்திரைப்படம் சரியாக பிக்கப் ஆகவில்லை.

Cobra movie
இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு “டிமாண்டி காலனி” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அஜய் ஞானமுத்து தயாரிக்க உள்ளதாகவும் அத்திரைப்படத்தை அவரின் உதவியாளர் வெங்கட் என்பவர் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இதில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

Ajay Gnanamuthu
அதாவது “டிமாண்டி காலனி 2” திரைப்படத்தை அஜய் ஞானமுத்துவே இயக்கவுள்ளாராம். மேலும் இத்திரைப்படம் அடுத்த வாரத்திற்குள் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. “கோப்ரா” திரைப்படம் கைக்கொடுக்காமல் போய்விட்ட நிலையில் “டிமாண்டி காலணி 2” திரைப்படத்தின் மூலமாகவாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என அஜய் ஞானமுத்து களமிறங்கிவிட்டாரோ என்னவோ!!