டிமாண்டி காலனி படக்குழுவின் வேற லெவல் பிளான்… 2027க்கு குறி வைத்த இயக்குனர்… தரமான சம்பவமா இருக்கும் போலயே!!

Demonte Colony
கடந்த 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “டிமாண்டி காலனி”. இத்திரைப்படம் அந்த வருடத்தின் மிகச் சிறந்த ஹாரர் திரைப்படமாக வெற்றி பெற்றது.

Demonte Colony 2
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது “டிமாண்டி காலணி 2” திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன் ஆகிய பலரும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் கூட “டிமாண்டி காலனி 2” திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்று வெளிவந்தது. மேலும் இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவருகிறது.

Demonte Colony 2
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் அருள்நிதி, “டிமாண்டி காலனி” திரைப்படம் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது “டிமாண்டி காலணி 2” திரைப்படத்தின் தொடர்ச்சியாக “டிமாண்டி காலனி 4” திரைப்படம் 2027 ஆம் ஆண்டு வெளியிடுவது போல் ஒரு திட்டம் இருக்கிறதாம். அதே போல் இத்திரைப்படத்தின் பார்ட் 3 2025 ஆம் ஆண்டு வெளிவரும் எனவும் அப்பேட்டியில் அருள்நிதி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தளபதி 67… LCU கன்ஃபார்ம்?? ஆனா அங்கதான் ஒரு குழப்பமே… என்ன பிரச்சனை தெரியுமா??

Ajay Gnanamuthu
அஜய் ஞானமுத்து இதற்கு முன் இயக்கிய “கோப்ரா” திரைப்படம் படுதோல்வியடைந்தது. இந்த நிலையில்தான் தனது ஹிட் படமான “டிமாண்டி காலனி” படத்தை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர். இத்திரைப்படம் எந்தளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.