
Cinema News
பிரபல நடிகருடன் நடிக்க ஆசை…ஆனால் அது விஜய் அஜித் இல்லை!… பேச்சுலர் நடிகை பளிச்..
புதுமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி இணைந்து நடித்துள்ள படம் பேச்சுலர்.
அறிமுகப்படத்திலேயே மேக்கப்பில்லாத திவ்யபாரதி அவரது கதாபாத்திரத்தில் அழுத்தமாய் நடித்திருக்கிறார்.
முதல் படத்திலேயே திவ்ய பாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.திவ்ய பாரதிக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
இளைஞர்கள் மனதில் லேட்டஸ்ட் கிரஷ் ஆக மாறியுள்ளார் திவ்ய பாரதி.பேச்சுலர் படத்தை தொடர்ந்து மலையாள படமான இஷ்க் படத்தின் ரீமேக்கில் ஒப்பந்தமாகி உள்ளார், நடிகர் கதிருக்கு அந்த படத்தில் ஜோடியாக திவ்ய பாரதி நடிக்க போகிறார் என தகவல்கள் வெளி
யாகி உள்ளன.
அடுத்து முகேன் ராவ்வின்,மதில் மேல் காதல் படத்தில் நடித்துள்ளார்,படத்தின் டீசர் வெளியாகியுள்ளது,படம் மே மாதத்தில் வெளியாகயுள்ளது .
மேலும் சேரன் இயக்கத்தில் வெப் சீரிஸ்-ல் நடிக்க உள்ளதாகவும் கூறினார்,வருங்காலத்தில் இந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை என அவரே கூறியுள்ளார்.
அந்த ஹீரோ வேறுயாரும் இல்லை,நம்ம நடிகர் தனுஷ் தான்..அவருடன் நடிக்க ஆசையாக உள்ளதாக கூறியுள்ளார் திவ்ய பாரதி.