விஜய் டெலிவிஷன் விருது விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகை யார் தெரியுமா? மற்ற விருதுகளின் விவரங்கள்!...
Vijay TV awards: விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் சின்னத்திரை பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் விருது பட்டியல் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சிறகடிக்க ஆசை தொடரின் பாட்டி ரேவதிக்கு சிறந்த பாட்டி விருது கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த தாத்தாவிற்கு பாக்கியலட்சுமி தொடரின் ராமமூர்த்தி கேரக்டரில் நடிக்கும் ரோசாரிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த மாமியார் விருது சிறகடிக்க ஆசை விஜய கேரக்டரில் நடிக்கும் ஆனிலாவிற்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: பிரசாந்தின் திடீர் சரிவுக்கு காரணம் இதுதானாம்… உண்மையை உடைக்கும் பிரபலம்..!
சிறந்த அம்மா விருது பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி கேரக்டரில் நடிக்கும் நிரோஷாவுக்கும், சிறந்த குடும்பம் விருது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 க்கும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நாயகியாக சிறகடிக்க ஆசை தொடரில் நடிக்கும் கோமதிப்பிரியாவிற்கும், சிறந்த நாயகனாக முத்து கேரக்டரில் நடிக்கும் வெற்றி வசந்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஜோடியாக மகாநதி தொடரில் நடிக்கும் சாமி மற்றும் லட்சுமி பிரியா பெற்றுள்ளனர். அறிமுக ஜோடி விருதை நீ நான் காதல் சீரியலில் நடிக்கும் பிரேம் மற்றும் வர்ஷினி பெற்றுள்ளனர். சிறந்த அப்பா விருதை பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டாலின் பெற்றுள்ளார். அறிமுக நாயகன் விருதை சின்ன மருமகள் சீரியல் நவீன் பெற்றுள்ளார்.
துணை நடிகர் மற்றும் நடிகையர் விருதை சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜ் மற்றும் ரோகிணியாக நடிக்கும் தேவா மற்றும் சல்மாவிற்கு கிடைத்துள்ளது. சிறந்த மாமனார் விருதை சிறகடிக்க ஆசையின் சுந்தரராஜன் பெற்றுள்ளார். நடிகர் தீபக்கிற்கு சின்னத்திரையில் 25 வருடத்திற்கான சிறப்பு விருது கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அவ நாயா பிறக்கட்டும்!.. நாகசைத்தன்யா 2வது மனைவி போட்ட பதிவு!.. யார சொல்றார்னு தெரியலயே!…
பொன்னி சீரியலில் நடிக்கும் வேதாஸ்யா சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதை பெற்றுள்ளார். சிறந்த என்டர்டைனர் விருதை மாகாபா பெற்றுள்ளார். குக் வித் கோமாளியின் குரோசிக்கு சிறந்த காமெடியன் விருது கிடைத்துள்ளது. சிறந்த வில்லன் விருதை நீ நான் காதல் நவீன் பெற்றுள்ளார். சிறந்த நடுவருக்கான விருதை குக் வித் கோமாளியின் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் தட்டி சென்றுள்ளனர்.
சிறந்த மருமகள் விருதை ஆஹா கல்யாணம் சீரியலில் மகாவாக நடிக்கும் அக்ஷயா பெற்றுள்ளார். சிறந்த ஒளிப்பதிவாளர் விருது சிறகடிக்க ஆசை மற்றும் செல்லமா சீரியலுக்கு கிடைத்துள்ளது. சிறகடிக்க ஆசை இயக்குனர் குமரனுக்கு சிறந்த இயக்குனர் விருது கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த தொகுப்பாளர் விருது ரியோ ராஜ் மற்றும் சிறந்த தொகுப்பாளினி விருது விஜே பிரியங்காவிற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் எபிசோட்களை கடந்த பாக்கியலட்சுமி தொடருக்கு சிறப்பு விருது கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த காமெடி ஷோவாக அது இது எது, சிறந்த கேம் ஷோவாக ஸ்டார்ட் மியூசிக் மற்றும் சிறந்த ரியாலிட்டி ஷோவாக சூப்பர் சிங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியிலிருந்து ஏஞ்சலினுக்கு சிறந்த அறிமுகமாக விருது கொடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த நான் ப்ரைம் சீரியலுக்கான விருது பொன்னிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ரியாலிட்டி ஷோகளில் சிறந்த ஜோடியாக நிஷா மற்றும் கே பி ஒய் பாலா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் இந்த விருது விழா நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.