Categories: Cinema News latest news

ரஜினியே நம்பாத இரண்டு படங்களை மெகா ஹிட் ஆக்கிய 2 பேர்!.. அட இது அவரே சொன்னதுதான்!..

70களின் இறுதியிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்டு திரையுலகில் படிப்படியாக உயர்ந்தார். துவக்கத்தில் கமலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்த ரஜினி ஒரு கட்டத்தில் தனி ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

எம்.ஜி.ஆர் பாணியில் ஆக்‌ஷன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ரஜினியின் படங்கள் வசூலை வாரிக்குவிக்கவே இவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டமும் கிடைத்தது. ரஜினி சினிமாவில் அறிமுகமானபோது பெரிய ஸ்டாராக இருந்த கமலஹாசனையே ஓரங்கட்டி முன்னேறினார். அவரை விட அதிக சம்பளமும் பெற்றார்.

இதையும் படிங்க: ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமாடா?!.. ரஜினி படத்துக்கு வந்த பெரிய சிக்கல்!..

ரஜினி நடித்த படங்களில் 95 சதவீம் வெற்றிப்படங்கள்தான். தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியாகி வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் கொடுத்த படங்கள் மிகவும் சொற்பம். அதனால்தான் இப்போதுவரை அவர் சூப்பர்ஸ்டாராக இருந்து வருவதோடு 72 வயதிலும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்.

அதேநேரம், அவரே நம்பாத இரண்டு படங்களை ஓட வைத்த இரண்டு பேர் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு ஹிந்தி படத்தை சுட்டு ரஜினி உருவாக்கிய கதைத்தான் பாட்ஷா. இந்த படத்தை எடுத்து முடித்தபின் பார்த்த ரஜினிக்கு திருப்தியே இல்லை.

இதையும் படிங்க: பாட்ஷா பாரு பாட்டுக்கு 10% ஈடாகுமா லியோ செகண்ட் சிங்கிள்!.. பதிலடி கொடுக்க ரெடியான ரஜினி ரசிகர்கள்!..

ஆனால், தேவா போட்ட பின்னணி இசை மற்றும் பாட்ஷா பாரு பாடல் ஆகியவை இந்த படத்தை வேறு லேவலுக்கு கொண்டு சென்றது. இயக்குனரின் பங்கு 50 சதவீதம் என்றாலும் பாட்ஷா சூப்பர் ஹிட் அடிக்க தேவாவின் இசையே காரணம் என ரஜினியே ஒரு விழாவில் பேசினார்.

அதேபோல்தான் சமீபத்தில் ஹிட் அடித்த ஜெயிலர் படம். இந்த படத்தை பார்த்த ரஜினிக்கு இது ஒரு எபோவ் ஆவரேஜ் படமாகத்தான் இருந்தது. ஆனால், அனிருத்தின் பின்னணி இசை மற்றும் தலைவரு நிரந்தரம் பாடல் ஆகியவை இப்படத்தை மேலே தூக்கிக்கொண்டு சென்றுவிட்டது. இதையும், ஜெயிலர் பட வெற்றிவிழாவில் ரஜினியே பேசியிருந்தார்.

இதையும் படிங்க: ஒரே படத்தில் வில்லனாக நடித்த ரஜினி, கமல்! அப்போ ஹீரோ யாரு? சொன்னா ஆச்சரியப்படுவீங்க

Published by
சிவா