Categories: Cinema History Cinema News latest news

தேவா எனக்கு ஹிட் கொடுக்க முடியுமா? சந்தேகப்பட்ட ரஜினியையே கப்சிப்பாக்கிய சம்பவம்!

தமிழ் சினிமாவில் கானா இசைக்கு கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை மெலோடியை விட பீட் பாடல்களை அதிகம் ரசிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்தவர் தான் தேனிசை தென்றல் தேவா. பொதிகை தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் தான் தேவா. 

முதல் படம் மனசுக்கேத்த மகாராசா. இப்படத்தில் ராமராஜன் நாயகனாக நடித்திருந்தார். சி. தேவா என்ற அவர் பெயரை தேவா என்றே போடுங்கள். அதான் நன்றாக இருப்பதாக கூறியதை அடுத்து தேவாவும் ஒப்புக்கொள்கிறார். படம் நல்ல வெற்றியை பெற்றாலும் பெரிய இடம் தேவாவிற்கு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: ரகுவரனின் நிறைவேறாத கடைசி ஆசை.. அதனால தான் அப்படி ஆனார்… கண்கலங்கிய ரகுவரனின் தாயார்..

இதை தொடர்ந்து அவர் பாடல் இசையமைத்த படம் தான் வைகாசி பொறந்தாச்சு. தன்னுடைய நண்பர் சொல்லிய வார்த்தைக்காக அன்பாலயா பிரபாகர் வாருங்கள். பார்க்கலாம் எனக் கூறி செல்கிறார். ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு தன்னுடைய குழுவுடன் போய் இறங்கிய தேவாவிற்கு ஷாக். அங்கு அவருக்கு முன்னாடியே ஒரு குழு இசையமைத்து விட்டு கிளம்பியது.

இருந்தும் நம்பிக்கையுடன் சென்றவர். அடுத்த சில மணித்துளியிலேயே படத்திற்கான 7 பாட்டையுமே இசையமைத்து விட்டார். இதனால் மகிழ்ந்த அன்பாலயா பிரபாகர் தன்னுடைய அடுத்த இரு படங்களுக்குமே தேவாவை இசையமைக்க ஓகே சொல்லிவிடுகிறார். பிரசாந்தின் வைகாசி பொறந்தாச்சு தேவாவிற்கென தனி அடையாளத்தினை சினிமாவில் உருவாக்குகிறது.

இதையும் படிங்க- ரகுவரன் லைஃப்ல மிஸ் பண்ணது! தனுஷ் மூலமாக நிறைவேற்றி ஆறுதலடைந்த சம்பவம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருந்த படம் அண்ணாமலை. அந்த படத்திற்கு தேவாவை பாலசந்தர் இசையமைக்க புக் செய்கிறார். ஆனால் ரஜினிக்கு அவரால் தன்னுடைய பாடல்களை ஹிட் கொடுக்க முடியுமா? என்ற மிகப்பெரிய சந்தேகமே எழுந்து விட்டதாம்.

ஆனால் அவர் நினைத்தற்கு மாறாக அண்ணாமலை படத்தில் எல்லா பாடல்களுமே மிகப்பெரிய ஹிட் பாடலாக மாறியது. இதில் மகிழ்ந்த ரஜினி தேவாவிற்கு தங்க செயினை பரிசாக கொடுத்தார். இது மட்டுமல்லாமல் எல்லா படங்களிலுமே வரும் சூப்பர்ஸ்டார் ரஜினி என்ற தீம் மியூசிக்கை உருவாகியது தேவா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan