More
Categories: Cinema History Cinema News latest news

ரஜினிக்கு திருப்தியே இல்லை.. மாஸ் ஹிட்டாக மாற்றிய தேவா!. அட அந்த படத்தையா சொன்னாரு!..

சில படங்கள் நடிக்கும்போது நன்றாக இருப்பது போலவே தெரியும். ஆனால், படம் முழுவதும் எடுத்த பின்பு போட்டு பார்த்தால் ஏதோ மிஸ் ஆவது போல தோன்றும். இந்த அனுபவம் பல இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் நடந்துள்ளது. பெரிய பெரிய நடிகர்களே இதை சந்தித்துள்ளனர். அதனால், படம் முழுவதுமாக முடிந்த பின் சில காமெடி அல்லது சண்டை காட்சி அல்லது செண்டிமெண்ட் காட்சி என மீண்டும் எடுத்து படத்தில் இணைப்பார்கள்.

rajini

தமிழில் சூப்பர்ஸ்டராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. தன் கேரியரில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இவரால் தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் நஷ்டமே அடைந்ததில்லை என்கிற நிலையை உருவாக்கியவர். சுரேஷ் கிருஷ்ணாவுடன் இவர் இணைந்து உருவாக்கிய திரைப்படம்தான் பாட்ஷா. இந்த படம் 1995ம் வருடம் வெளியானது.

Advertising
Advertising

ரஜினியின் திரை வாழ்வை பாட்ஷாவுக்கு முன், பாட்ஷாவுக்கு பின் என்று கூட பிரிக்கலாம். அந்த அளவுக்கு ரஜினியின் திரைவாழ்வில் மிகவும் முக்கிய படமாக பாட்ஷா இருக்கிறது. இந்த படத்தின் வெற்றிவிழாவில் பேசியபோதுதான் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து ரஜினி பேசினார். அதன்பின்னரே அவருக்கும் ஜெயலலிதாவுக்குமான பனிப்போர் துவங்கியது. ரஜினியை அரசியலுக்கு இழுக்கவும் அந்த நிகழ்வே காரணமாக இருந்தது.

சரி விஷயத்திற்கு வருவோம். இந்த படத்திற்கு முன் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அண்ணாமலை மற்றும் வீரா ஆகிய இரண்டு படங்களில் ரஜினி நடித்திருந்தார். பாட்ஷா படம் முடிந்து பார்த்து ரஜினிக்கு அப்படம் திருப்தியை தரவில்லை.

Deva

இதுபற்றி ஒரு விழாவில் பேசிய ரஜினி ‘பாட்ஷா படம் பார்த்தபோது எனக்கு நம்பிக்கையே ஏற்படவில்லை. உடனே தேவாவுக்கு போன் செய்து படம் ‘அண்ணாமலை’ போல் இருக்கிறதா?’ எனக்கேட்டேன். அதற்கு அவர் ‘இது பத்து அண்ணாமலை சார்’ என சொன்னார். எனக்கு சந்தேகமாகவே இருந்தது. ஆனால், நான் நடித்த காட்சிகளுக்கு சிறப்பான பின்னணி இசையை கொடுத்து படத்தை வேறு வெவலுக்கு அவர் கொண்டு போனார். பாட்ஷா பட வெற்றிக்கு தேவாவின் பாடல்களும், பின்னணி இசையே முக்கிய காரணம்’ என ரஜினி பேசியிருந்தார்.

Published by
சிவா

Recent Posts