மீனாவுடன் போட்டிப்போட்டு பிடிவாதம் பிடித்த முரளி… பத்தே நிமிடத்தில் தேவா போட்ட சூப்பர் ஹிட் பாடல்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த முரளி, தொடக்கத்தில் “கெலுவினா கஜ்ஜே”, “பிரேம பர்வா”, “பிலி குலாபி” ஆகிய கன்னட திரைப்படங்களில் நடித்திருந்தார். முரளியின் தந்தையான சித்தலிங்கய்யா அந்த காலகட்டத்தில் கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்தவர்.
இத்திரைப்படங்களை தொடர்து தமிழில் “பூவிலங்கு” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் முரளி. அதனை தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்த முரளி, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். குறிப்பாக அவர் நடித்த “பகல் நிலவு”, “இதயம்”, “இரணியன்”, “சுந்தரா டிராவல்ஸ்” போன்ற திரைப்படங்கள் முக்கிய வெற்றித்திரைப்படங்களாக அமைந்தன. இவ்வாறு தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த முரளி கடந்த 2010 ஆம் ஆண்டு இறுதய கோளாறால் காலமானார்.
இந்த நிலையில் நடிகர் முரளி, நடிகை மீனாவுடன் போட்டிப்போட்டு பிடிவாதமாக இருந்ததால் உருவான ஒரு சூப்பர் ஹிட் பாடலை குறித்த சுவாரஸ்யமான தகவலை இப்போது பார்க்கலாம்.
1997 ஆம் ஆண்டு முரளி, மீனா, சங்கவி, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பொற்காலம்”. இத்திரைப்படத்தை சேரன் இயக்கியிருந்தார். ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் சார்பாக காஜா மைதீன், ஞானவேலு, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர்.
தேவாவின் இசையில் “பொற்காலம்” திரைப்படத்தில் இடம்பற்ற பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக இதில் இடம்பெற்ற “சிங்குச்சான் சிங்குச்சான்”, “தஞ்சாவூரு மண்ணு எடுத்து” போன்ற பாடல்கள் காலத்துக்கும் ரசிக்கப்படும் பாடல்களாக அமைந்தது.
இதில் “சிங்குச்சான் சிங்குச்சான்” பாடல் மீனாவிற்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட பாடல் ஆகும். இந்த நிலையில் முரளி தயாரிப்பாளரிடம் “மீனாவுக்கெல்லாம் தனி பாடல் இசையமைத்திருக்கிறீர்கள். எனக்கும் அது போன்ற ஒரு தனிப்பாடல் வேண்டும்” என கேட்டாராம்.
இதையும் படிங்க: உயிர் போகும் நிலையில் இருந்த எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்த நடிகர்… பின்னாளில் வில்லனாக மாறிய சுவாரஸ்ய சம்பவம்…
அப்படி முரளிக் கேட்டுக்கொண்டதன் பேரில் உருவான பாடல்தான் “தஞ்சாவூர் மண்ணு எடுத்து” என்ற பாடல். அதுவும் முரளி கேட்டுக்கொண்டவுடன் பத்தே நிமிடத்தில் இந்த பாடலை உருவாக்கியிருக்கிறார்கள் இசையமைப்பாளர் தேவாவும், கவிப்பேரரசு வைரமுத்துவும். இவ்வாறு பத்தே நிமிடத்தில் உருவான இப்பாடல் தமிழ் சினிமா இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடலாக அமைந்தது.