புள்ள வளர்ச்சியா இல்ல… பீர்க்கங்கா வளர்ச்சியா? – அட இது 96 படத்துல நடிச்ச பொண்ணா இது?..!

Published on: June 27, 2023
devadharshinis-daughter-niyathi
---Advertisement---

பொதுவாகவே கிராமப்புறத்தில் புள்ள வளர்ச்சியா இல்ல… பீர்க்கங்காய் வளர்ச்சியா? என்ற ஒரு பழமொழி வழக்கில் உள்ளது. அந்த பழமொழிக்கு ஏற்ப தற்போது 96 திரைப்படத்தில் சிறுமியாக நடித்த தேவதர்ஷினி மகள் நியதியின் புகைப்படம் வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

இந்த நியதி மர்ம தேசம் ரமணி வெர்சஸ் ரமணி போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நகைச்சுவை நடிகையான தேவதர்ஷினியின் மகளாவார்.

devadharshinis-daughter-niyathi
devadharshinis-daughter-niyathi

சீரியல்களில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடிகை கோவை சரளாவுக்கு அடுத்த நிலையில் ஒரு மிகச் சிறந்த நகைச்சுவை நடிகையாக வலம் வந்தவர் தான் இவர்.

குறிப்பாக ராகவா லாரன்ஸ் ரோடு இணைந்து நடித்த திகில் படங்களில் இவரது நடிப்பு பேசும்படி இருந்தது மேலும் அந்த படங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்ததோடு இவருக்கு என்று ஒரு சிம்மாசனத்தை கொடுத்தது என்று கூறலாம்.

தேவ தர்ஷினியின் கணவரான சேத்தனும் ஒரு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராவார். இவர்கள் இருவரின் அன்பு மகளான நியதி கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த 96 என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியோடு முக்கியமான காட்சியில் நடித்திருப்பார்.

ஏற்கனவே இவருக்கு பிகில் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அந்த வாய்ப்பை மிக முக்கியமான பரிச்சை இருந்ததால் ஏற்க முடியவில்லை. இதனை அடுத்து இவ ராணி என்ற மலையாள திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது சோசியல் மீடியாக்களில் தன் மகள் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கும் தேவதர்ஷினிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்கள் மேலும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தை பலரும் பார்த்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார்களே என்று ஆச்சரியத்தோடு புகைப்படத்தை பார்த்து வருவதோடு விரைவில் கதாநாயகியாக இவர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

Brindha

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.