Cinema News
கொஞ்ச நஞ்ச பேச்சா? சத்தமே இல்லாமல் 21 வருடங்கள் கடந்து ‘தேவர் மகன்’ படம் செய்த சாதனை!
இன்று மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில் , கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் மாமன்னன். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்களை பூர்த்தி செய்ததா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் தான் நடைபெற்றது. அப்போது மாரிசெல்வராஜ் பேசிய பேச்சு அந்த நிமிடத்தில் பெரிதாக பார்க்கப்படவில்லை. ஆனால் அதை ஊடகங்கள் உற்று நோக்கி பெரிய சர்ச்சையாக மாற்றியது. அதாவது தேவர் மகன் படத்தில் இசக்கி கதாபாத்திரத்தில் வரும் வடிவேலு தான் இந்த படத்தில் மாமன்னன் என்று சொல்லியிருப்பார்.
அதுமட்டுமில்லாமல் அந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தூக்கி வைத்து பேசி எடுத்ததனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்றும் தேவர் மகன் படத்தை பார்த்தே கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற படங்களை எடுத்தேன் என்றும் அந்த தேவர் மகன் படத்தின் தாக்கம் இன்னும் என்னுள் இருக்கிறது என்றும் ஆதங்கத்தை கூறினார்.
ஆனால் தேவர் மகன் படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்தி எடுக்கப்பட்ட படமாக அமையவில்லை. ஒரு சமூகத்தில் இருக்கும் இரு பங்காளிகளுக்கு இடையே நடைபெறும் காலங்காலமான சண்டைகளை பிரதிபலிப்பதாகவே எடுக்கப்பட்ட படமாக அமைந்திருக்கும். மேலும் அந்த காலத்திற்கு அந்தப் படம் தேவைப்பட்டது. ஆனால் இசக்கி தான் மாமன்னன் என்று அந்த மேடையில் மாரிசெல்வராஜ் சொல்லியிருப்பார்.
ஏற்கெனவே மாமன்னன் திரைப்படம் மேற்கு மாவட்ட அரசியலை சார்ந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படி இருக்கும் போது தேவர் சமூகத்தை சேர்ந்த இசக்கி எப்படி மாமன்னனாக முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
எது எப்படியோ சமீபத்தில் கமல் நடிப்பில் வேட்டையாடு விளையாடு படம் ரி ரிலீஸ் ஆனது. அதற்கு பதிலாக தேவர் மகனை ரி ரிலீஸ் செய்திருந்தால் எக்கச்சக்க வசூலை அள்ளியிருக்கும். ஏனெனில் தேவர் மகன் படத்தை ஓடிடியில் அதுவும் எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் தேவர் மகன் படத்திற்கு பெரிய ஹைப்பையே ஏற்படுத்தி விட்டு போயிருக்கிறார் மாரிசெல்வராஜ் என பிரபல திரைவிமர்சகர் ராமானுஜம் கூறியுள்ளார்.