தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் யாருக்காக உருவாக இருந்தது தெரியுமா? இந்த மாஸ் ஹிட் நாயகிக்கு தான்...
தமிழ் சீரியல் என்றால் முதல் வரும் ஒரு சில பெயர்களில் கோலங்கள் நாடகமும் இடம்பெற்று விடும். திருச்செல்வம் இயக்கத்தில் தேவயானி நடித்து 1500 எபிசோட்டை கடந்த இந்த தொடருக்கு இன்றைய தேதியில் கூட ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அபி என்ற கதாபாத்திரத்தில் மொத்த குடும்பத்தினை தாங்கும் வேடம் தேவயானி உடையது. அந்த சமயத்தில் ஒவ்வொரு குடும்ப பெண்ணின் நிலையை அப்படியே எடுத்து சொன்னதால் சீரியல் பெரிய அளவில் ரீச்சை கொடுத்தது. ஆனால் இந்த கதைக்கு முதலில் தேர்வானவர் தேவயானி இல்லை.
தமிழ் சினிமாவில் சில நடிகைகளுக்கு தான் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் அவர்களின் நடிப்புக்காக இருக்கும். அந்த லிஸ்டில் முக்கிய இடம் பிடித்திருந்தவர் சௌந்தர்யா. ரஜினிகாந்தின் ஆஸ்தான நாயகி படையப்பா, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களில் அவருடன் ஜோடி போட்டவர். அப்படிப்பட்ட சௌந்தர்யாவை தான் கோலங்கள் சீரியலில் களமிறக்க முடிவு செய்திருந்தனர். அவருக்கு ஒப்புக்கொள்ள அதற்கான வேலைகளும் நடந்து வந்த நேரத்தில் தான் விமான விபத்தில் சௌந்தர்யா இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.