Connect with us
devayani

Cinema News

அஜித் மாதிரி இருக்காதீங்க..பட விழாவில் குமுறிய தேவயாணி.. என்னாச்சு இவருக்கு?

ஒரு நடிகையாக 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை தேவயானி. எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் தி பெஸ்ட் படமாக அவருடைய சினிமா கெரியரில் இருப்பது காதல் கோட்டை திரைப்படம். அந்த படத்திற்கு பிறகு தான் தேவயானி என்ற ஒரு நடிகையை இந்த தமிழ் சினிமா பயன்படுத்த தொடங்கியது. அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.

ஆரம்பத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இதெல்லாம் தேவையா? இப்படித்தான் சினிமாவில் வர வேண்டுமா என்ற முடிவுக்கு எல்லாம் வந்த தேவயானி அதன்பிறகு தொட்டாசிணுங்கி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார். அதுவும் ஒரு கிளாமர் ரோல் அவருக்கு இருந்தது .அதை எல்லாம் ஏன் நடித்தோம் என பின்னர் வருத்தப்பட்டு இருக்கிறார் தேவயானி.

இப்படி ஆரம்பத்தில் சில சங்கடங்களை எதிர்கொண்டு தான் இந்த சினிமாவிற்குள் வந்தார், அதன் பிறகு தான் காதல் கோட்டை, நினைத்தேன் வந்தாய், பிரெண்ட்ஸ், மூவேந்தர் என தொடர்ந்து படங்களில் நடித்து ஒரு வெற்றி நடிகையாக வலம் வந்தார். காதல் கோட்டை திரைப்படம் எந்த அளவு அவரை புகழின் உச்சியில் கொண்டு சென்றதோ அதைப்போல சூரியவம்சம் திரைப்படமும் அவருக்கு மற்றொரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

அந்த படமும் அவருக்கு ஒரு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இப்படி பல படங்களில் நடித்த தேவயானி திடீரென இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டது தமிழ் சினிமா உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஏனெனில் இரவோடு இரவாக தன்னுடைய வீட்டின் கேட்டை தாண்டி தனது காதல் கணவரான ராஜகுமாரனை கரம் பிடித்தார் தேவயானி.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு இப்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் இருக்கிறார். தற்போது படங்களில் நடித்து வந்தாலும் இயக்குனராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். கைக்குட்டை ராணி என்ற ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் தேவயானி. இந்த நிலையில் ஒரு படத்தின் ஆடியோ விழாவிற்கு சென்றபோது அஜித்தை பற்றி ஒரு தகவலை பகிர்ந்தார் தேவயானி.

இஎம்ஐ என்ற அந்த படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ஆதவனை பற்றி குறிப்பிடும் பொழுது நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள். நிறைய படங்கள் நடிக்க வேண்டும். வருஷத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்கள் நடிக்க வேண்டும் .அஜித் குமார் மாதிரி இருக்காதீங்க என அவரைப் பற்றி குறிப்பிட்டார் தேவயானி. ஏனெனில் அஜித் வருடத்திற்கு ஒரு படம் என்ற அடிப்படையில் தான் நடித்து வருகிறார். அதனால் அவரை மாதிரி இருக்க வேண்டாம். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என ஆதவனை பார்த்து சொல்லி இருக்கிறார் தேவயானி.

google news
Continue Reading

More in Cinema News

To Top