அந்த ஒரு பாட்டை நம்பி மோசம் போன தேவயாணி!...கடைசில தான் தெரிஞ்சது இவரு யாருனு?..
காதல் கோட்டை, சூர்யவம்சம், வல்லரசு, தொடரும் , போன்ற பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான கதாநாயகியாக இருந்தவர் நடிகை தேவயாணி. இவருடைய வளர்ச்சி காதல்கோட்டை படத்திற்கு பிறகு தான் படிப்படியாக உயர்ந்தது.
அதுவரைக்கும் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலிலும் க்ளாமர் பாடலிலும் முகத்தை காட்டிவந்தார் தேவயாணி. கிட்டத்தட்ட 7 மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தேவையாணி முதன் முதலில் தமிழில் அறிமுகமான படம் தொட்டாசினுங்கி. ரகுவரன், ரேவதி, ரோகினி, கார்த்திக், நாகேந்திரபிரசாத் நடித்துள்ள இந்த படத்தில் நாகேந்திர பிரசாத்திற்கு ஜோடியாக தேவையாணி நடித்திருந்தார்.
இந்த படத்தில் முதலில் நடிப்பதற்கு இவரிடம் அணுகிய படக்குழு ஹம்மா ஹம்மா பாடல் பார்த்திருக்கிறீர்களா? அந்த பாடலில் நடித்த் பையனுக்கு ஜோடியாக தான் நீங்கள் நடிக்க போறீங்க என்று சொன்னதும் மும்பையில் இருந்த தேவையாணி இந்த பாடல் ஹிந்தியிலும் செம ஹிட்.
அதனால் ஐ..இந்த பாட்டுக்கு ஆடிய பையன் கூடவா நாம் நடிக்க போறோம்னு ஒரு பெருமிதத்துல நடிக்க வந்தேனு சிரிப்பை அடக்கமுடியாமல் கூறினார் தேவயாணி. அன்று அவர் நினைத்திருப்பார் நாகேந்திரபிரசாத் மிகவும் பிரபலமானவர் என்று. ஆனால் வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுருக்கும்.இந்த கோணத்தில் தான் சிரிப்பை அடக்கமுடியாமல் இந்த விஷயத்தை பகிர்ந்தார் தேவயாணி. ஆனால் காதல் கோட்டை படம் தான் எனக்கு நடிகை என்று அங்கீகாரம் கொடுத்த முதல் படம். அதற்கு முன் க்ளாமர் அப்படி இப்படினு நடித்திருந்தாலும் எனக்கானது கிடையாது என்று கூறினார்.