சந்தானம் அப்படி சொன்னது வருத்தம்தான்.. முதன் முறையாக ஃபீல் பண்ணி பேசிய தேவயாணி

by Rohini |   ( Updated:2025-05-03 22:43:00  )
devayani
X

devayani

Devayani: 90கள் காலகட்டத்தில் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு கனவு கன்னியாக வந்தவர் தேவயானி. காதல் கோட்டை திரைப்படத்திற்கு பிறகு காதலின் தேவதையாகவே பார்க்கப்பட்டவர். இந்த மாதிரியும் ஒரு காதலி இருப்பாளா என்று அனைவரையும் ஏங்க வைத்தவர். ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து காதல் கோட்டை திரைப்படம் தான் அவருக்கு ஒரு முக்கிய அந்தஸ்தை கொடுத்த திரைப்படமாக மாறியது.

அதிலிருந்து தொடரும், ஆனந்தம் ,நினைத்தேன் வந்தாய், விண்ணுக்கும் மண்ணுக்கும் ,ஃபிரண்ட்ஸ், சூர்யவம்சம் என அடுத்தடுத்து லீடு ரோலில் நடிக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார் தேவயானி. கிளாமர் எதுவும் காட்டாமல் தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் இந்த தமிழ் சினிமாவில் பத்து வருடத்திற்கும் மேலாக ஆட்சி செய்தார்.

ஹீரோயினுக்கு நடிப்பு மட்டும் இருந்தால் போதாது கிளாமரையும் காட்ட வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை இருக்க அதை எல்லாம் உடைத்து கிளாமர் காட்டாமலும் என்னால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ள முடியும் என நிரூபித்தார் தேவயானி. இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் அப்போதைய காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

ஏனெனில் தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்வதற்காக இரவு தன் வீட்டை விட்டு ஓடி வந்துதான் திருமணம் செய்து கொண்டார். ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் இது அப்போது ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலிருந்து இப்போது வரை தேவயானியும் ராஜகுமாரனும் அழகான நட்சத்திர தம்பதிகளாக மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தது வருகிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு தேவயானி இப்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் ராஜகுமாரன் படங்களை இயக்குவதிலோ நடிப்பதிலோ எதிலும் தலை காட்ட வில்லை. ஆனால் ஒரு சில படங்களில் காமெடி நடிகராகவும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார் ராஜகுமாரன். அதில் கடுகு திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

அதன் பிறகு சந்தானத்துடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் இணைந்து ஒரு காமெடி காட்சியில் நடித்திருப்பார். ட்ரெயினில் போகும்பொழுது ராஜகுமாரனை பார்த்து சந்தானம் கிண்டல் பண்ணுவது போல அந்த காட்சி இடம்பெற்றிருக்கும். ஆனால் அதில் நடித்தது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அந்த ஒரு சீன் மட்டும் தான் நான் பார்த்தேன், அந்தப் படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. இவரிடமும் நான் ஏன் இப்படி நடித்தீர்கள் என கேட்டேன். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்று ஒரு பேட்டியில் தேவயானி கூறி இருக்கிறார்.

Next Story