ரொம்ப டீசண்ட்டா படுக்க கூப்பிட்டாங்க!.. சீரியல் நடிகை தேவிப்பிரியா பேட்டி…

Published on: March 18, 2023
devipriya
---Advertisement---

நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. வாய்ப்பு இல்லாத அல்லது மார்க்கெட்டை இழந்த சில நடிகைகள் தடம் மாறி அப்படி செல்வதால் எல்லாரையும் அப்படியே பார்க்கும் பொதுவான மனப்பான்மை எப்போதும் நிலவுகிறது.

சில பெரிய மனிதர்கள் நடிகைகளிடம் அப்படி நடந்து கொள்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதான் சில வருடங்களுக்கு முன்பு மீ டூ இயக்கமாக மாறி பல்வேறு துறைகளில் இருந்தும் பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர். ஆனால், அதனால் எந்த மாற்றமும் நடைபெறவில்லை.

devi
devi

இந்நிலையில், பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அதில், ‘சமீபத்தில் எனக்கு ஒரு போன் கால் வந்தது. பெங்களூரிலிருது பேசுவதாக கூறி டீசண்டாக அதுவும் ஆங்கிலத்தில் ஒருவர் பேசினார். நாளை மறுநாள் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம். நீங்கள் பெங்களூருக்கு வர முடியுமா?’ என கேட்டார். சரி வருகிறேன் என்றேன். எப்போது வருவீர்கள் என கேட்டார். ‘நிகழ்ச்சி நடக்கும் அன்று காலை வந்துவிட்டு நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்று விடுவேன்’ என்றேன். இல்லை நீங்கள் நாளைக்கே வர வேண்டும் என்றார்.

devi
devi

எதற்காக நான் நாளைக்கு வரவேண்டும் என கேட்டேன். இல்லை மேம் ஒரு என்.ஆர்.ஐ நபர், பெரிய பணக்காரர். அவர் கொடுக்கும் இரவு விருந்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்’ என சொன்னார். நான் அதிலெல்லாம் கலந்து கொள்ள மாட்டேன் என சொன்னேன். சரி என போனை வைத்துவிட்டார்.

devi
devi

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் என்னை தொடர்பு கொண்ட அந்த நபர் ‘உங்கள் பி.ஆர்.ஓ, அல்லது மேனேஜர் எண் இருந்தால் கொடுங்கள். நான் அவர்களிடம் பேசுகிறேன்’ என்றார். எனக்கு புரிந்துவிட்டது. ‘உங்கள் நோக்கம் எனக்கு புரிகிறது. ஆனால், நீங்கள் நினைக்கும் பெண் நான் இல்லை’ என்றேன். உடனே ‘சாரி மேம். இனிமேல் உங்களிடம் இப்படி கேட்க மாட்டேன். நிகழ்ச்சி தொடர்பாக மட்டுமே பேசுவேன்’ என அந்த நபர் கூறியதாக தேவிப்பிரியா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்த தடவை எங்க ஆட்டம் வேற மாதிரி இருக்கும்! – சஸ்பென்ஸ் வைத்த இயக்குனர் மோகன் ஜி

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.